வழி நடத்தும் தன்மை Tucson, Arizona USA 65-1031A 1என்னே அது மிகவும் அருமையானது, உங்களுக்கு நன்றி, நன்றி... நன்றி... என்னுடைய குட்டி சகோதரர்களே உங்களுக்கு நன்றி, பிள்ளைகளே, உண்மையாக உங்களுக்கு என் நன்றி, மிக்க நன்றி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இயேசுவானவர் இப்படி சொல்லி உள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்களா, சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள். வருங்கால ஆண்களும் பெண்களும் நீங்களே, வருங்காலம் என்று ஒன்று இருக்குமானால், நீங்கள் அவர்களாய் இருப்பீர்கள். இவைகள் எல்லாவற்றுக்கும் பின்னர், என்னால் இப்பொழுது நான்கு மணி நேரங்கள் பேச முடியும் என்று நம்புகிறேன். நான் களைத்துப் போனேன் என்று நினைக்க துவங்கினேன், சின்ன பையன்களும் சின்ன பெண்களும் இவ்வளவு அருமையாக பாட முடிகின்றது ஆச்சரியம் அல்ல. உங்களுடைய மூத்த சகோதரிகளும் தாய்மார்களும் எப்படி பாடுகிறார்கள் என்பதை கவனியுங்கள். அற்புதமான பாடகர்கள் அது மிகவும் அருமையாக இருக்கின்றது. அந்தப் பாடலை நடத்தின அந்த சிறுமி யார், நான் அங்கே சந்தித்தேனே அந்தப் பெண்தானா, நிச்சயமாகவே அருமையான குரல் உங்கள் எல்லாருக்கும். நான் இதுவரை பாட கேட்ட பாடல்களிலே, மிக அருமையானது இங்கேதான் இருக்கிறது, “நீங்கள் யாவரும் அதை எல்லா நேரத்திலும் பழகுகிறீர்களா? நீங்கள் அருமையாய் பாடும் நல்ல ஆற்றலினால் நிச்சயமாகவே ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறீர்கள், என்று உங்களுக்கு கூறுகிறேன்”. நன்றாக பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும், நான் அவ்வளவாக விரும்புகிறேன். நான் பரலோகத்தை சேரும்போது, அவர்கள் அங்கே எங்கே பாடுவார்களோ நான் அவ்விடம் போய் கேட்பேன் என்று நான் எப்பொழுதும் சொல்லுவதுண்டு. பாடலினால் என்னால் ஒரு திருப்தியை பெறவே முடியவில்லை. “பாடுவது தைரியத்தை கொடுக்கும் என்று உங்களுக்கு தெரியும் உங்களுக்கு தெரியாதா”, போர் வீரர்கள் யுத்தக்களத்திற்கு போகும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா “அவர்கள் இன்னிசை வாசித்து பாடி தங்களுக்குத் தைரியம் ஊட்டும்படி மற்ற காரியங்களை செய்வார்கள்”. நாம் யுத்தத்திற்கு போகும்போதும் நாம் பாடுகிறோம், நாம் தொடர்ந்து போகும் படியாய் அது நமக்கு தைரியத்தைக் கொடுக்கின்றது. அந்த, “அருமையான அன்பளிப்பிற்காக குட்டி பையன்களே உங்களுக்கு என்னுடைய நன்றி” அது அப்படித்தான். திருமதி பிரான்ஹாம், “ரெபெக்காள், ஜோசப், சாராள் மற்றும் நாங்கள் யாவரும் உங்களுக்கு எங்கள் மிகுந்த நன்றியை” தெரிவிக்கின்றோம். அதை சொல்வதென்றால் எளிதல்ல, “சின்னப் பிள்ளைகளுக்குள்ளே இவர்களுக்கு எப்படி சொல்லுவது, உங்களது சில்லறைகளை சேமித்து, எனக்கு அன்பளிப்பு கொடுத்தீர்கள்” என்பதை அறிந்தபடியினால் எப்படி சொல்வது, “எனக்கு அதை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லை நான் அதை எப்படி உணர்கிறேன் என்று உங்களுக்கு தெரியும் அதை ஏற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை”. இருந்தபோதிலும், “அதை நான் பார்த்த போது, அதற்குள்ளாக 10 டாலர் நோட்டு வைக்கப்பட்டிருந்தது” நான் அதை ஏற்றுக் கொள்ளலாமா என்று நினைத்தேன். நான் அதை எப்படி செய்ய முடியும் என்று எண்ணினேன், ஆனால் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகின்ற ஒரு சிறு கதை, என் நினைவுக்கு வருகின்றது. ஒரு நாள் ஒரு விதவையான ஒரு ஸ்திரீ இருந்தாள். அவளுக்கு சில குழந்தைகள் இருந்தனர், ஒருக்கால் அந்த குழந்தைகளுடைய தகப்பனார் போய்விட்டு இருக்கலாம். அவளிடம் இரண்டு காசுகள் மட்டுமே இருந்தது, ஒரு நேரம் அவள் தெருவழியே வந்தாள், அது தசமபாகப் பணமாய் இருந்தது. 2நீங்கள் சேமித்து வைத்தது போன்ற சின்ன காசுகள், அவள் அதை தேவனுடைய பொக்கிஷத்தில் போய் போட்டு விட்டாள். இயேசுவானவர் அங்கேயே நின்று கொண்டு, அவளைக் கவனித்துக் கொண்டு இருந்தார். நான் அங்கே நின்று கொண்டு இருந்திருப்பேனானால், நான் என்ன செய்திருப்பேன் என்று ஆச்சரியப்படுகிறேன், “ஒருகால் அவளண்டை ஓடிப்போய், சகோதரியே வேண்டாம், வேண்டாம் நீங்கள் அதை செய்ய வேண்டாம்” என்று சொல்லியிருப்பேன். 3பார்க்கப்போனால் உண்மையாகவே அது எங்களுக்கு தேவை இல்லை, உன் பிள்ளைகளுக்காக, அது உனக்கே தேவையாய் இருக்கிறது என்று சொல்லியிருப்பேன். புரிகின்றதா. அதை செய்யும் படியாய் நான் அவளை அனுமதித்திருக்கவே மாட்டேன். ஆனால் இயேசுவானவரோ, அவள் அதை செய்யும்படி அனுமதித்தார். பாருங்கள். அவள் அதை செய்யும்படியாக அனுமதித்தார, ஏன்? பெற்றுக் கொள்வதைக் காட்டிலும், கொடுப்பது மிகவும் ஆசீர்வாதமானது என்று அவர் அறிந்திருந்தார். அவளுக்கு அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அவர் அறிவார். பாருங்கள். ஆகவே சிறு பிள்ளைகளே, என் முழு இருதயத்தோடு நான் உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். இந்த அருமையான ஐக்கியத்தின் நேரத்திற்காக, உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். சகோதரன். லியோ ஜின், (Leo and Gene). இது எனக்கு உண்மையாகவே மூன்று நாள் ஆராதனையாக இருந்தது, நான் காட்டிற்குள் இருக்கும் போது கூட வேட்டையாடுகிறேன் என்று நினைக்கும் படியாக, நான் என்னை தானே முழுவதுமாய், அதிலே விட முயற்சிக்கும் போது, எப்படி ஏதோ நான் உன்னை நோக்கி பார்ப்பேன் நீ பேசுவதை கேட்பேன். உங்களுடைய வீடுகளை சந்திக்கும் படியான சிலாக்கியம் எனக்கு கிடைத்தது. 4நான் பார்த்ததே கிடையாது, அதற்குள் நடந்து போனதும் கிடையாது, நான் அதை ஒரு கிராமம் என்று அழைக்கப் போகிறேன். இவ்வளவு சுத்தமான ஒழுக்கமான வீடுகளையும், ஜனங்களையும் நான் கண்டதில்லை. அதிலும் சுவிஷேசத்திற்கும், கிறிஸ்துவுக்கும் இவ்வளவு மரியாதை கொடுக்கிறவர்களை, நான் ஒருபோதும் எங்கேயும் கண்டதில்லை. நீங்கள் உண்மையாகவே சரியான பாதையில் துவக்கி இருக்கிறீர்கள். தொடர்ந்து போய்க்கொண்டே இருங்கள், தேவன் உங்களோடு கூட இருப்பார். உங்களில் சிலரை நான் பார்க்கத்தான் வேண்டும். அன்றொருநாள் இந்த சகோதரிகளை கண்டேன். அவர்களை யார் என்று எனக்கு தெரியாது. ஏனென்றால் நீங்கள் குல்லாக்களை அணிந்திருப்பதால், அவர்களுக்கும் உங்களுடைய மூக்கையும் கண்களை மட்டும் என்னால் காணமுடிகின்றது. சகோ. லியோ ஜின் அவர்களின் உபசரிப்பின் மூலமாக. இப்போது உங்களை நன்றாய் அறிவேன் என்று நம்புகிறேன். இவர்கள் என்னை உங்களுடைய வீடுகளுக்கெல்லாம் கூட்டிச்சென்று, சிறு பிள்ளைகளோடு கைகுலுக்கும் படி செய்தார்கள். வரும் காலம் ஒன்று இருக்குமானால், தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசினியிமாக இருக்கப்போகிறவர்கள் இவர்கள்தான். இயேசுவானவர் சிறுப்பிள்ளைகளை நேசிக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா. ஒரு நேரத்திலே மோசே என்ற சிறு பையன் இருந்தான், அவனைக் குறித்து சிறிது நேரம் நாம் பேசப் போகிறோம். 5அவன் ஒரு அருமையான பையன். அவனை ஒரு நல்ல பையனாய் ஆக்கியது என்ன அவனுக்கு உதவி செய்தது என்னவென்று உங்களுக்கு தெரியுமா. அவனை வளர்க்கும் படியாக, அவனுக்கு ஒரு அருமையான தாயார் இருந்தாள். பாருங்கள். அவள்தான் அவனை அப்படி ஆக்கினாள், கர்த்தரைக் குறித்து அவனுக்கு போதித்தால், சிறு பையன்களுக்கும், சிறு பெண்களுமாகிய உங்களுக்கும், உங்களை வளர்க்கவும் உங்களுக்கு போதிக்கவும், அதே மாதிரியான தாய்மார்கள் இருக்கிறார்கள். அவர்களை அப்படி கண்காணியுங்கள், வேதத்தில் இருக்கின்ற முதலாவது கற்பனை என்னவென்று உங்களுக்கு தெரியுமா. அதாவது வாக்குத்தத்ததோடு கூடிய ஒரு கற்பனை என்னவென்று உங்களுக்கு தெரியுமா, இந்த கற்பனைகளை புரிந்து கொள்வது ஒருக்கால் உங்களுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கலாம்.19. முதலாவது கற்பனை என்னவென்றால், என்னையன்றி உங்களுக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் என்பதே, ஆனால் பெரிய கற்பனை. வாக்குத்தத்தத்தையும் உடைய முதலாவது கற்பனை பாருங்கள் பிள்ளைகளுக்குரியதாய் இருக்கிறது. பாருங்கள். அது பிள்ளைகளுக்குரியதாய் இருக்கிறது, உங்களுக்கு அது தெரியுமா புரிகின்றதா, பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியுங்கள். அப்பொழுது தேவன் இந்த பூமியில் உங்களுக்கு கொடுத்த நாட்களை நீடித்திருக்க பண்ணுவார். உங்கள் பெற்றோரை கவனித்து நீங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள். அது பூமியின் மேல் உன் நாட்களையும், தேவன் உனக்கு கட்டளையிட்ட நாட்களையும், நீடிக்க பண்ணும். நீ அவருக்கு அதிக காலம் சேவை செய்யும்படியாக, வரப்போகின்ற நாட்களின் சுவிசேஷகர்களை, பாடகர்களை, போதகர்களை, இன்றைக்கு நான் நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்று நம்புகிறேன். 6அப்படி நமக்கு ஒரு காலம் பின்னால் இருக்குமானால். இங்கே ஒரே ஒரு காரியம் இருக்கின்றது, நேசிப்பதில் ஒரு மனிதனை கொன்று போடுகிறீர்கள். நான் சாப்பிடுவதில் என்னால் முடிந்தவரை சாப்பிடுவது இவ்வளவு அதிகமாக என்னை ஒருபோதும் பராமரித்ததில்லை. நான் பரலோகத்திலிருந்து கீழே விடப்பட்ட ஒரு தூதனாய் இருந்திருப்பேனானால், இதைக்காட்டிலும் மேலாய் என்னை பராமரித்திருக்க மாட்டார்கள். என்னால் உங்களிடத்தில் சொல்லக்கூடிய தெல்லாம் உங்களுக்கு நன்றி என்பது தான். நீங்கள் டூசானுக்கு வரும் போது, என்னால் ஒருக்கால், இப்பேர்பட்ட பராமரிப்பை செய்யக்கூடாது இருக்கலாம், ஏனென்றால் எப்படி என்று எனக்கு தெரியாது, அதை செய்யவேண்டிய மரியாதை முறைகள் என்னிடம் இல்லை, ஆனால் என்னால் இயன்ற நேர்த்தியாக நான் செய்வேன். அங்கே வாருங்கள். சகோதரன், சகோதரி, சாண்ட்ஸ். (Shantz) அவர்களுக்கு நிச்சயமாய் நான் நன்றி கூற விரும்புகிறேன். உங்களுடைய அழகான வாலிப மகனையும், மகளையும் இன்று மதியம் சந்திக்கும் சிலாக்கியம் எனக்கு கிடைத்தது, ஆராதனைக்காக உங்கள் வீட்டை திறந்து கொடுத்தமைக்காகவும் நன்றி கூறுகிறேன். வேதாகமக் காலங்களில் இப்படிப்பட்டதான சம்பவங்கள் நடந்தேறின என்று உங்களுக்குத் தெரியும். நான் சொல்வது மிகவும் சொற்பமாய் தோன்றுகிறது என்று நான் அறிவேன். அப்படி அல்லவென்று நாம் நினைக்கலாம், ஆனால் அந்த நாட்களில் அவர்களுக்கிருந்தது போலவே, தேவனுக்கு இன்றைக்கும் இது அவ்வண்ணமாகவே உள்ளது. 7நினைவிருக்கட்டும் இன்னும் பல வருஷங்கள் உண்டாயிருக்குமானால், அவர்கள் காலத்தைத் திரும்பிப் பார்த்து இப்படி சொல்லலாம், நான் மட்டும் அந்நாட்களில் பிரஸ்காட்டில் (Prescott!). வாழ்ந்திருப்பேனானால். நான் மட்டும் ஜீவித்துக்கொண்டு இருந்து இருப்பேனானால், பாருங்கள். இப்பொழுது நாம் அந்த நாட்களில்தான், ஜீவித்து கொண்டிருக்கிறோம். அப்படியானால் நாம் பாதையின் முடிவிற்க்கு வந்துள்ளோம், அப்படியானால் அந்த மகா பெரிய நாளில் நமது பலனுக்காக நாம் காத்துக் கொண்டிருப்போம். இப்பொழுது நாம் தேவனுடைய வார்த்தையை திறந்து வாசிக்கப் போகிறோம். ஆனால் அதை செய்யும் முன்பாக அவரிடத்தில் ஒரு நொடிப்பொழுது பேசுவோம். அந்த நேசமானது நாங்கள் எதிர்பார்த்ததற்கு அதிகமாக மிஞ்சிப்போய் விட்டது, அவைகள் மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது என்று நாங்கள் அறிவோம். ஆனால் இப்படி ஒரு ராஜரீக உபசரிப்பு எங்களுக்கு கொடுக்கப்படும் என்று எங்களுக்கு தெரியாது, கர்த்தாவே இந்த ஜன கூட்டத்தோடு உம்முடைய பிரசன்னம் எப்பொழுதும் இருக்கும் படியாகவும், பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொரு இருதயத்தையும் நிரப்பும் படியாகவும், அவர்களுக்கு நித்திய ஜீவனை நீர் கொடுக்கும் படியாகவும், நான் ஜெபிக்கிறேன். 8இன்றைக்கு நாங்கள் களி கூறுவதுப் போன்றதான, ஒரு முடிவில்லாத நாள், நாங்கள் நேசிக்கின்றதும் ஆராதிக்கின்றதுமான, இப்படிப்பட்ட காரியங்களுக்காக ஸ்தோத்திரம் செலுத்துகின்றதுமான, அவருடைய சமூகத்தில் நாங்கள் கூடுகின்ற ஒரு முடிவில்லாத நாள் எங்களுக்கு உண்டாய் இருப்பதாக. அந்த நேரம் மட்டுமாக கர்த்தாவே. அவரிடத்தும் அவருடைய வார்த்தையின் இடத்திலும், நாங்கள் நன்றி விசுவாசம் உள்ளவர்களாய் இருக்கும்படி காத்துக்கொள்ளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென். காலையில் நான் அதிக நேரம் காக்க வைத்தேன், இப்பொழுது நான் துரிதமாய் முடிக்க பிரயாசிப்பேன். ஒரு விதமான சிறுப்பிள்ளைகள் இடத்தில் பேசுவது போன்று நான் பேசப் போகிறேன். பெரியவர்களும் கூட புரிந்து கொள்வார்கள். பரிசுத்த மாற்கு எழுதின சுவிசேஷத்தில் இருந்து, வேத வார்த்தைகளை வாசிக்க நான் விரும்புகிறேன். மாற்கு 10ம் அதிகாரம் 17ம் வசனத்திலிருந்து ஒரு பகுதியை வாசிப்பேன். 9பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால் படியிட்டு: நல்ல போதகரே, நித்திய ஜீவனை சுதந்தரித்துகொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. விபச்சாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கை கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்பு கூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்கு கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாய் இருந்தபடியால், இந்த வார்த்தைகளைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். 10இப்பொழுது பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் எல்லாருக்கும், நான் இந்த சிறிய செய்தியை நேரத்தோடும் சீக்கிரமாய் முடிக்க விரும்புகிறேன். நான் பேசும்படியாக ஒரு சந்தர்ப்பத்தை எடுக்க, ''என்னை பின்பற்றுங்கள்'' என்பதை எடுக்கிறேன், ''வழிநடத்தும் தன்மை'' என்ற ஒரு பொருளை எடுத்து பேச விரும்புகிறேன். பின்பற்று யாரோ ஒருவர் முன் நடத்தவும், வழிநடத்தும் தன்மை. என்னை பின்பற்றுங்கள், நினைவில் வையுங்கள், நம்மில் யாரேனும் எப்பொழுதாவது முதலடியை எடுத்து வைத்திருப்போமானால், அதில் யாரோ நம்மை வழி நடத்தினார்கள், தாய்மார்களே, உங்களுடைய மகனோ மகளோ எடுத்து வைத்த முதல் அடி நினைவிருக்கிறதா? அவர்கள் அதை ஒருபோதும் நினைப்பது கிடையாது. உன்னுடைய முதல் அடியை எடுத்து வைக்கும் போது, யாரோ உன்னை முன் நடத்தினார்கள். எனக்கு நினைவு இருக்கின்றது பில்லிபால் தனது முதல் அடியை எடுத்து வைக்கும் போதும் இன்னும் ஜோசப்பும், மற்றவர்கள் எல்லாரும் தான். அவர்கள் முதல் அடியை எடுத்து வைத்தது எனக்கு நினைவிருக்கிறது, வழக்கமாக ஒரு குழந்தையினுடைய முதல் அடியை வைக்க நடத்துவது ஒரு தாய் தான். ஏனென்றால் தகப்பனார் ஜீவிப்பதற்காக, வெளியே சென்று உழைப்பதனால் தாய் தான் வீட்டில் இருப்பாள், இப்படியாய் அவர்கள் முதலடியை எடுத்து வைப்பார்கள். 11இரவு நேரங்களில் அவர்கள் வீட்டிற்கு வரும்போது, தகப்பனிடத்தில் அவள் எப்பொழுதும் சொல்லுவாள். ஓ. அப்பா தெரியுமா ஜானி, மேரி, சிறு பையனோ பெண்ணோ குழந்தையால் நடக்க முடியும் வந்து பாருங்களேன் என்பாள். ஒரே ஒரு அடி தான், அதற்கே ஒருகால் தாயானவள் அவனை பிடிக்க வேண்டும். தாயார் அவர்களை இருக்கப்பிடிக்க வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் நீங்கள் ஒரு விதமாக பலவீனமாக இருந்தீர்கள். பக்கவாட்டில் விழுந்து விடுவீர்கள் உங்களுக்கு தெரியுமா, ஆகவே உங்களுடைய முதல் அடியை எடுத்து வைக்கும் போது உங்களுடைய தாயாரின் கரத்தை பற்றிக்கொள்ள வேண்டியதாய் இருந்தது. உன்னுடைய முதல் அடியை நீ எடுத்து வைக்கும் போது யாரோ உனக்கு உதவி செய்தார்கள். உன்னுடைய ஜீவியத்தில் நீ ஒரு கடைசி அடியை எடுத்து வைக்க வேண்டியதாய் இருக்குமானால், யாரோ ஒருவர் உன்னை வழிநடத்திக் கொண்டு போவார்கள். பாருங்கள். அது சரிதானே, நீங்கள் அதை நினைவு கூற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உன்னுடைய முதல் அடியில் யாரோ உன்னை நடத்தினார்கள், உன்னுடைய கடைசி அடியும் யாராவது நடத்திக்கொண்டு இருப்பார்கள். நாம் நடத்தப்பட வேண்டியவர்களாய் இருக்கிறோம். 12உங்களுக்கு தெரியும், தேவன் நம்மை செம்மறி ஆடுகளைப் போன்று நினைக்கிறார் என்று. செம்மறியாடானது தானாக வழிநடந்து போகாது என்று உங்களுக்கு தெரியுமா? அவன் அலைந்து திரிந்து வழிதவறி போய்விடுவான், அவனால் தானாகவே தன்னை நடத்திக்கொள்ள தெரியாது. அவனை வழி நடத்தும் படியாக அதற்கு யாராவது இருக்க வேண்டும். சில நேரங்களில் மேய்ப்பன் தான் ஆடுகளை வழிநடத்த வேண்டியவனாய் இருக்கிறான். அது கர்த்தராகிய இயேசுவானவர் பூமியின் மேல் இருந்த நாட்களில், ஆடுகளை நடத்தின நல்ல மேய்ப்பனாய் அவர் இருந்தார். ஆனால் இன்றைக்கோ நாம் இன்னொரு நாளில் நாம் ஜீவித்துக் கொண்டு இருக்கிறோம். எல்லா காரியங்களும் மாற்றப்பட்டு தலைகீழாக ஆக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்றைக்கு எந்த மனிதன், செம்மறி ஆடுகளை நடத்த வேண்டியவனாய் இருக்கின்றான் என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு வெள்ளாடு, அந்த வெள்ளாடு செம்மறி ஆடுகளை எங்கே நடத்துகிறது என்று உங்களுக்கு தெரியுமா? நேராக கழுத்து வெட்டப்படும் படி உள்ளே கொண்டு போகின்றது. அந்த சிறிய செம்மறி ஆடுகளுக்கு எங்கே போகிறோம் என்றே அறியாது இருக்கிறார்கள். ஆகவே வெள்ளாடானது, அந்த ஆட்டு பட்டிக்கு உள்ளேபோய், நேராக கழுத்து வெட்டப்படும் இடத்திற்கு போகின்றது, செம்மறி ஆடிற்க்கோ பின்பற்றி போவதை தவிர வேற ஒன்றும் தெரியாது. ஆக அது அவைகளை நேராக கழுத்து வெட்டப்பட நடத்துகிறது. பின்னர் அந்த பாதையிலிருந்து வெள்ளாடானது எகிறிக்குதித்து வெளியே ஓடிவிடும். செம்மறியாடு அதே வழியாய் போய் கொல்லப்படும். புரிகின்றதா... அது ஒரு வெள்ளாடு, ஒரு தவறான வழி நடத்துபவன். ஆனால் ஆடுகளை வழி நடத்துகிறதான, நல்ல மேய்ப்பன் இயேசுவே. அவர் அவைகளின் கரங்களைப் பற்றி பிடித்து, ஜீவனுக்குள் நடத்துகிறார். புரிகின்றதா. செம்மறி ஆடுகளை யாராவது ஒருவர் நடத்த வேண்டும். முதலாவது காரியம், தாயினுடைய பாசம், பின்னர் தகப்பனுடைய வார்த்தை, உன்னுடைய தாயார் உன்னுடைய முதல் அடியை உனக்கு கொடுத்த பின்னர், நீ உன் தகப்பனை நோக்கி பார்க்கிறாய். நாமெல்லாரும் ஞானத்திற்காக, ஏனென்றால் அவரே வீட்டிற்க்கு தலையானவர். 13வழக்கமாக தகப்பன், அவர் மிகவும் சாமர்த்தியமானவர் என்பதற்காக அல்ல, அவர் குடும்பத்திற்கு தலையாக வைக்கப்பட்ட படியினாலே, ஆகவே நாம் நம் தகப்பனார் சொல்லும் விதமாய் பின்பற்றுகிறோம். மகனே நீ இன்னின்ன காரியத்தை, செய்வது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்வாரானால், நாம் அவர் சொல்வதற்கு செவிசாய்க்கின்றோம். ஏனென்றால் அது ஞானம், ஆனால் கவனியுங்கள், அவர் அதிகமாய் கற்றறிந்து உள்ளார், அவர் என்ன கற்றுள்ளார் என்பதை அழியும் வன்னமாகவே, நாம் அவரிடம் கேட்க வேண்டும். அப்படியானால் அதன் மூலமாய் அவர் கற்றறிந்து உள்ளதால் நாம் பயனடைகிறோம். நீ போகாதே இதை செய்யாதே, ஏனென்றால் நான் அதை செய்துள்ளேன். என் தகப்பனார் நான் அதை செய்யக்கூடாது என்று சொன்னார். ஆனால் நான் போய் செய்வேன், அதன் விளைவாக எனக்கு இந்தக் காரியம், ஏதோ தவறாக சம்பவித்தது என்று அவர் சொல்லுகிறார். பின்னர் தகப்பனார் எப்படி செய்ய வேண்டும் என்றும், சரியாக எப்படி செய்ய வேண்டும் என்றும் கற்றுத் தருகிறார். 14நாம் தகப்பனிடத்தில் இருந்து ஞானத்தையும், புரிந்துகொள்ளுதலையும், பெற்றுக்கொள்ளும் நேரம் வரும் வரைக்கும், தாயானவள் நம்மை நடத்துவாள். அதன் பின்னர் நாம் இன்னொருவரை பெற்றுக் கொள்கிறோம். இன்னொரு வழிநடத்துபவரை நாம் பெற்றுக் கொள்கிறோம். அது ஒரு உபாத்தியாயர் (ஆசிரியர் Teacher ஒரு நல்ல பள்ளிக்கூட வாத்தியார்) அவர் உனக்கு போதிக்க முயற்சித்து, ஒரு நல்ல கல்வி அறிவை உனக்குத் தருவார். வாழ்க்கையில் உன்னை ஒரு ஸ்தளத்திலும், ஒரு ஸ்தானத்திலும் மேன்மையாக பொருத்தும் படிக்கு, நீ வேதத்தை வாசிக்கும் படிக்கும், பாடல்களை பாடும் படிக்கும், நீ தேவனைப் பற்றி அறிந்து கொள்ளவும் நீயாகவே வாசிக்கும் படியாகவும் முயற்சிப்பார், உங்களுக்கு புரிகிறதா. அதற்குப் பின்னர் இன்னொரு காரியம், ஒருக்கால் உங்களுக்கு ஏதாவது வர்த்தகம் இருக்கலாம். அம்மா அப்பா யாராவது உனக்கு ஒரு கடிதம் எழுதலாம், அதை உன்னால் வாசிக்க முடியாமல் இருக்கலாம். பாருங்கள். ஆகவே அந்த ஆசிரியரை, அப்பொழுது நீ அவளுடைய கண்காணிப்பில் இருக்கிறாய், நீ படிக்கவும் எழுதவும் கற்றுக் கொள்ளும்படி உன்னை வழிநடத்துகிறார். அது ஒரு நல்ல காரியம், ஒரு நல்ல ஆசிரியர் உனக்கு சரியானதை போதிக்க, ஆனால் நீ அதை விட்டபிறகு, அந்த ஆசிரியரை விட்டபிறகு, இப்படி ஒரு ஆசிரியருக்கு பிறகு இன்னொரு ஆசிரியராக மாறி மாறி, குழந்தைகள் வகுப்பிலிருந்து அடுத்தபடி, அடுத்தபடியாக உன்னை உயர்நிலைப்பள்ளிக்கு, அல்லது கல்லூரிக்கு போகும்படியாய், நீ கல்லூரியை விட்ட பின்னர். ஆசிரியர் உன்னை வழி நடத்துவது தீர்ந்தது, புரிகிறதா பாருங்கள். 15தாயானவள் உனக்கு நடக்கச் சொல்லி தந்தாள், நீ எப்படி ஒரு உபயோகமும் அருமையான ஒரு வாலிபனாய், எப்படியாக வேண்டும் என்றும். நீ எப்படி உன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்றும். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் தகப்பனார் உனக்கு போதித்தார். ஆசிரியர் எப்படி சரியாக எழுத வேண்டும் என்றும், எப்படி படிக்க வேண்டும் என்றும் உனக்கு ஒரு கல்வியறிவை போதித்தார். ஆனால் இப்பொழுதோ நீ உன் தகப்பனாரை விட்டு போகின்றாய், உன் தாயாரை விட்டு போகின்றாய், உன்னுடைய ஆசிரியரையும் விட்டுப் போகின்றாய், இப்பொழுது இந்த தருணத்தில் இருந்து உன்னை வேறு யாராவது வழிநடத்த வேண்டும். இத்தருணத்தில் இருந்து யார் உன்னை வழி நடத்த வேண்டும் என்று நீ விரும்புகிறாய்? ஒரு சிறு பிள்ளை இயேசு என்று சொல்லுகிறது... அது சரியே. அத்தருணத்தில் இருந்து இயேசுவானவர் உன்னை வழி நடத்தலாம். அது ஒரு அருமையான ஒரு நல்ல பதில் அத்தருணத்தில் இருந்து இயேசு உன்னை வழிநடத்துகிறார். நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றதான இந்த வாலிபன், ஒரு ஐசுவரியம் உள்ள வாலிபத் தலைவன் என்று அழைக்கப்பட்டான். இந்த வாலிபன் சரியான முறையில் வழிநடத்தப்பட்ட ஒருவனாய் காணப்பட்டான். 16அவனுடைய தாய், அவனை நடக்க பயிற்சித்தாள் பாருங்கள். அவன் இன்னமும் ஒரு வாலிபனாக தான் இருந்தான். ஒருக்கால் உயர்நிலைப் பள்ளி முடித்திருக்கலாம், ஒரு நல்ல மிகவும் பேறுபெற்ற வாலிபனாக இருந்தான். அவன் மிகவும் நன்றாக பயிற்றுவிக்கப்பட்டு இருந்த படியினால், ஒருக்கால் நல்ல ஜீவியம் செய்தவனாக இருக்கலாம். அவனுடைய தாய் எப்படி அவனுக்கு போதித்திருப்பாள், அவன் ஒரு வெற்றி கண்ட வாலிபனாக கூட இருந்திருக்கலாம். ஏனென்றால் பாருங்கள் அவன் ஏற்கனவே ஒரு ஐசுவரியவானாக இருந்தான். அவன் இன்னும் ஒரு வாலிபனாய் இருந்தான். ஒருக்கால் பதினெட்டு வயது இருக்கலாம். உயர்நிலைப் பள்ளியில் இருந்து வெளியே வந்திருக்கலாம். அவன் ஐசுவரியவானாய் இருந்தான், அவன் ஒரு சரியான ஜீவியம் செய்யும் படியாய், அவனுக்கு ஒரு சரியான ஆசிரியரால் ஒரு சரியான போதனை கொடுக்கப்பட்டது. அவனுக்கு சரியான ஒரு ஆசிரியர் இருந்தார். அவன் இன்னும் வாலிபனாய் இருந்தபோது, அவன் மிகுந்த ஆஸ்தி உள்ளவனாய் இருந்தான். அவனுடைய தகப்பனார் அவனுக்கு மிகுதியான பணத்தை வைத்திருந்தார். அவன் உண்மையாகவே ஒரு வாலிப தலைவனாயிருந்தான். அந்த வயதிலும் கூட அவன் மிகவும் காரிய சித்தி உள்ளவனாய் இருந்தான். பாருங்கள். அவனுக்கு போதிக்க தக்கதான ஒரு நல்ல ஆசிரியரை உடையவனாய் இருந்தான். அவனுக்கு சரியான காரியத்தை போதித்தான். அவனுக்கு ஒரு நல்ல கல்வியறிவு உண்டாயிருந்தது, அதற்குப் பிறகு இந்த வாலிபனுக்கு இன்னொரு உபாத்தியாயர் இருந்தார். நீ எந்த விதமாக உருவாக்கப்படுகின்றாய் என்பது அதைப் பொறுத்ததாய் இருக்கின்றது. ஆனால் இந்த வாலிபனுக்கு தன்னுடைய வீட்டிலேயே மத சம்பந்தமான போதனை உண்டாயிருந்தது. அவனுடைய தாய் தகப்பனுக்கு தேவனிடத்தில் விசுவாசமில்லை. அவனுடைய தாயும் தகப்பனும் குடிக்கிறார்கள், புகைக்கிறார்கள், சண்டையிடுகிறார்கள், ஒருவருக்கொருவர் இரவிலும் மற்ற காரியங்களிலும், எதிர்த்து பாய்வார்கள். தங்களுடைய சிறு பிள்ளைகளுக்கும் ஆகாரம் சமைத்து கொடுக்க மாட்டார்கள். உங்களுக்கு ஒரு நல்ல அருமையான, கிறிஸ்தவ தாயாரும் தகப்பனாரும் இருப்பதினாலே, உங்களுக்கு சந்தோஷம்தானே. உங்களுக்கு பிள்ளைகள் உண்டாயிருக்கும் போது, உங்கள் தாயும் தகப்பனையும் போன்றவர்களாய் நீங்கள் இருக்க உங்களுக்கு பிரியமில்லையா, பாருங்கள். 17இவைகள் எல்லாம் நல்லதுதான், இந்த வாலிபனுக்கு நல்ல மத சம்பந்தமான போதனைகள் உண்டாயிருந்தது. அங்கே சிலருக்கு இருப்பதைவிட மிஞ்சி இருந்தது. ஏனென்றால் அவர்களுக்கு பயபக்தியான மத போதனை கிடையாது, ஆனால் இந்த வாலிப மனுஷனுக்கு பயபக்தியான மத போதனை உண்டாயிருந்தது. ஏனென்றால் அவன் சொன்னான், நான் என் சிறுவயது முதல், கற்பனைகளை கை கொண்டு வருகிறேன் என்று, உங்கள் ஒவ்வொருவருக்கும் கூட நல்ல பயபக்தியான மத போதனையாளர்கள் இருக்கிறார்கள், 20 வயதுக்குட்பட்ட வாலிப பயன்களும் பெண்களாகிய உங்களுக்கு கூட நல்ல போதகர்கள் இருக்கிறார்கள். உங்களுடைய தாயும் தகப்பனும் இந்த கூடாரத்திற்குள் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு நல்ல மனிதனாகவும் மனுஷியாகவும் ஆக அவசியமாய் தேவைப்படுகிற எல்லா அம்சங்களும் இங்கே உண்டு. 18ஏனெனில் நினைவிருக்கட்டும், ஒரு நாளில் நீ மரிக்க போகின்றாய் அல்லது மறுரூபமாகி பரலோகத்துக்கு போகின்றாய். ஒருக்கால் அவர் வருகைக்கு முன்னர், நீ மரிப்பாயானால், நீ முதலாவது எடுத்துக்கொள்ளப் படுவாய், அது உனக்கு தெரியுமா? உங்களுக்கு முன்பாக ஏற்கனவே நித்திரை அடைந்தவர்கள், நீ மரிப்பதற்கு முன்னர், அப்பாவும் அம்மாவும் மரித்துபோவார்களேயானால், நம்முடைய தலைமுறையில் இயேசுவானவர் வரவில்லை என்றால். இந்த அப்பாவும் அம்மாவும் மகிமையடைந்தவர்களாய் உனக்கு முன்பாக வருவார்கள் என்பது உனக்கு தெரியுமா? பாருங்கள். தேவ எக்காளம் முழங்கும் அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், முதலாவது எழுந்திருப்பார்கள், பின்பு உயிரோடு இருக்கும் நாமும் அவர்களோடேகூட எடுத்துக்கொள்ள படுவோம். அந்த வண்ணமாக நாம் மாறுதல் அடைவோம். அதுதான் நம்முடைய ஜீவியத்தின் மிகவும் முக்கியமான காரியம், அதுதான்... நாம் அதை நினைவில் வைக்க வேண்டும். இப்பொழுது உங்களுக்குப் புரிகின்றதா, அதுதான் ஜீவியத்தில் முக்கியமான காரியம், நாம் செய்ய வேண்டியது அவரை சந்திக்க நாம் ஆயத்தமாக வேண்டும். வெறுமனே மார்க்க சம்பந்தமானவைகள் கிரியை செய்யாது. இந்த வாலிப தலைவனை இங்கே பாருங்கள். அவன் சொன்னான், நல்ல போதகரே, இப்பொழுது நான் அதை சொல்வதற்கு முன்னர் ஞாபகத்தில் வையுங்கள், அவன் சரியான ஜீவியம் செய்யும் படியாய் போதிக்கப்பட்டிருந்தான், அவனுக்கு நல்ல கல்வி அறிவு இருந்தது, அவனுக்கு (Commerce) வாணிப அறிவு போதிக்கப்பட்டு இருந்தது, மிகுந்த ஆஸ்தியுள்ளவனாய் இருந்தான். ஒரு தலைவனாய் இருந்தான், அவனுக்கு மார்க்க சமயம் இருந்தது, ஆனால் அவன் இன்னொரு பிரச்சனையால் குறுக்கிட பட்டிருந்தான். அது நம் எல்லோரையும் குறுக்கிடுகிறது. அதாவது “”நித்தியஜீவன்“” மார்க்கம், மதம், உங்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்காது. மார்க்க ரீதியாக இருப்பது ஒரு போர்வையே, ஆனால் அது நமக்கு நித்திய ஜீவனை கொடுக்காது. அவன் மேன்மையான போதகர்களால் போதிக்கப்பட்டிருந்தான். இருப்பினும் அவனுக்கு ஏதோ காரியம் குறைவாய் இருந்தது, அந்த வாலிபன் அதை அறிந்திருந்தான். ஏனென்றால் அவன் நல்ல போதகரே, நித்திய ஜீவனை சுதந்தரிக்கும்படி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபடியினால், நீங்கள் இயேசுவானவர் தேவனென்று விசுவாசிப்பீர்கள் இல்லையா? ஆகவே அவர் அந்த வாலிபனின் சிந்தனைகளை அறிந்திருந்தார். 19ஆகவே அவர் சொன்னார், “கற்பனைகளைக் கைக்கொள்” என்று. அவனுடைய மார்க்கத்தைக் குறித்து, அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கும்படியாக, நேராக அவனுடைய மார்க்கத்துக்குள்ளாகவே அவர் சென்றார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், உன்னுடைய மார்க்கத்தை கைக்கொள் என்றுதான் அவர் சொன்னார். அவன் சொன்னான், “நான் சின்னப்பையனாக இருந்ததுமுதல் இதை செய்து வருகிறேன்” என்று, உங்களை போன்று சிறு பையனாக இருந்ததிலிருந்து, என்னுடைய அப்பாவும், அம்மாவும், ஆசாரியனும் எனக்கு மார்க்கத்தை குறித்து சொல்லித் தந்தார்கள். ஆனால் எனக்குத் தெரியும் என்னுடைய மார்க்கத்தில், நான் இன்னமும் நித்திய ஜீவன் இல்லாமல் இருக்கிறேன் என்று, பாருங்கள். நீ நல்லவனாய் இருக்க முடியும், களவு செய்யாதே, புகை பிடிக்காதே, பொய் சொல்லாதே, அப்பா அம்மாவிடம் பொய் சொல்லாதே, அந்த முதல் பொய்யை சொல்லாதே, ஏனென்றால் ஒன்று ஒன்றை சொல்லும் அதன் பிறகு இன்னொரு பொய் சொல்லுவது மிகவும் எளிது புரிகிறதா? ஆனால் நீங்கள் அதை செய்யக்கூடாது. முதலாவது பொய்யை, சொல்லாதேயுங்கள். பொய் சொல்லும் படியாய் உங்கள் சரீரம் உண்டாக்கப் படவில்லை என்று அறிவீர்களா? உங்களுக்குத் தெரியுமா அதற்கென்று இப்பொழுது ஒரு கருவி இருக்கிறது, அது உன் நரம்பிலே உள்ளது, உன்னுடைய மணிக்கட்டில் ஒரு பட்டையை கட்டி ஒன்றை உன் தலையின் மேல் கட்டி, பின்பு நான் சொன்னேன் என்று அங்கே சொல்லுங்கள். நான் அதைக் குறித்து பொய் சொன்னேன் என்று சொல்லுங்கள். ஆனால் நான் உண்மையைத்தான் சொல்கிறேன். அவர்கள் நம்பும்படியாக நான் அவ்வளவு சுலபமாய் என்னால் சொல்ல முடியும். அவர்கள் சொல்வார்கள், “நீ அந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்தாயா, ஞாயிற்றுக்கிழமை பகல் இன்னின்ன நாளிலே சகோதரன். பிரான்ஹாம் பிரசங்கித்த போது நீ சகோதரன். சாண்ட்ஸின் டிரெய்லரில், (Shatnz's Trailer) உட்கார்ந்து கொண்டு இருந்தாயா” என்பது போன்று, “இல்லை ஐயா, நான் அங்கே உட்காரவில்லை, இல்லை ஐயா,” என்று சொல்வீர்கள். அந்தப் பொய் கண்டுபிடிப்பு கருவி என்ன சொல்லும் என்று உங்களுக்கு தெரியுமா, “ஆம் ஐயா, நீர் உட்கார்ந்தீர் ஆம் ஐயா, நீர் உட்கார்ந்தீர்” என்று சொல்லும். நான் செய்யவில்லை என்று நீ சொல்வாய், அது சொல்லும் ஆம் நீ செய்தாய் என்று, ஏன்? ஏனென்றால் பொய் என்பது ஒரு பயங்கரமான காரியம். பொய் பேசும் படியாய் சரீரம் உண்டாக்க படவில்லை. அவ்வளவு ஒரு பயங்கரமான காரியமாய் இருப்பதினால், நீ பொய் சொல்லும்போது, உன்னுடைய முளற் நரம்பு அமைப்பையும், அது மாற்றி போடுகிறது. வியூ.. ஒருவிதமான உள் வளர்ச்சி போன்றவை ஏற்படும் அளவிற்கு மாற்றத்தை உண்டாக்கி அது உன்னை கொன்றுபோடும். இன்றைய பொய் என்பது ஒரு கெட்ட காரியம், ஏனெனில் நீங்கள் பொய் சொல்ல, களவு செய்ய, இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்ய வேண்டியவர்கள் இல்லை, ஆகவே இந்த வாலிபன் ஒருக்கால் பொய் சொல்லாமல் இருந்திருக்கலாம், அவன் திருடவில்லை, ஆனால் எப்பொழுதும் நித்திய ஜீவன் தேவை என்ற உணர்வு உள்ளவனாய் இருந்தான். ஆகவே அவன் சொன்னான், “அதை நான் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்யலாம்” என்று. மார்க்கமானது இதை செய்யாது என்பதை, இயேசுவானவர் இங்கே காட்டுகிறார். ஆகவே, நேராக அவனிடத்தில் “அவர் கற்பனைகளைக் கைக்கொள்” என்றார். அவன் சொன்னான், “போதகரே சிறு பையனாக இருந்த போதிலிருந்தே இவைகளை செய்து வருகிறேன், அல்லது நான் குட்டிப் பையனாக இருக்கும்போதே நான் அதை செய்கிறேன்” என்றான். நான் அதை செய்தேன், ஆனால் தன்னிடத்தில் நித்திய ஜீவன் இல்லை என்று அவன் அறிந்திருந்தான். 20ஆகவே அவர், “அதன் பின்னர் சொன்னார், நீ நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க வேண்டுமானால், நீ பரிபூரண பட வேண்டுமானால், போய் எதையெல்லாம் விற்று” பாருங்கள். இப்போது பணமுடையவர்களாய் இருப்பது எல்லாம் சரிதான், பாருங்கள். பணமுடையவர்களாய் இருப்பது ஐசுவரியமாய் இருப்பது எல்லாம் சரிதான், ஒரு தலைவனாக இருப்பது எல்லாம் சரிதான், ஆனால் காரியம் என்னவென்றால் அதன் பிறகு நீ நடந்து கொள்ளும் விதம்தான், புரிகின்றதா. அவர் சொன்னார், “போய் உனக்கு உள்ளதை எல்லாம் விற்று, தரித்திரருக்கு கொடு, ஒன்றுமில்லாதிருக்கிற ஜனங்களுக்கு கொடுத்து விட்டு, பின்னர் வந்து என்னை பின்பற்று, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும்” என்று சொன்னார். ஆனால் அந்த வாலிபனுக்கு, என்ன செய்வதென்றே தெரியாத அளவுக்கு, அவனிடத்தில் அவ்வளவு பணம் இருந்தது, பாருங்கள். அதிக பேர் பெற்றவனாக இருந்தான், அந்த வாலிப மனிதன், வாழ்க்கையில் அவனுக்கு எல்லாம் இருந்தது. அவனுடைய தாயும், தகப்பனும், ஆசாரியர்களும், எல்லாருமாக எல்லா தேவைகளையும் சந்திக்கும் அளவிற்கு அவனை ஆளாக்கி வைத்திருந்தார்கள். ஆனால் இன்னமும் தனக்கு ஏதோ குறைச்சல் உண்டு என்பதை அவன் அறிந்திருந்தான், இப்பொழுது நான் முதியோர்கள் இடத்தில் பேசுகிறேன். அவனுக்கு ஏதோ குறைச்சல் உண்டென்று அவன் அறிந்திருந்தான், அவனிடத்தில் நித்திய ஜீவன் இல்லை, அவன் அதை அறிந்திருந்தான். புரிகின்றதா. மார்க்கமானது நித்தியஜீவனை உண்டு பண்ண முடியாது, தோற்றங்கள், உணர்ச்சிகள், எப்படியோ உணரலாம், நீ பயந்து போகலாம், எப்படியோ உணரலாம் அழலாம், அது நல்லதுதான், சத்தம் இடலாம் அது நல்லதுதான், ஆனால் அது அதுவல்ல பாருங்கள்.60. நீ நித்தியஜீவனோடு சந்திக்க வேண்டியவனாய் இருக்கின்றாய், நீ சொல்லலாம், நான் ஒரு வைராக்கியமான பாப்டிஸ்டாய் இருந்தேன், மெத்தடிஸ்ட்டாக இருந்தேன், அல்லது பிரஸ்பிடெரியனாக இருந்தேன், பெந்தேகோஸ்தேவாக இருந்தேன் என்று சொல்லலாம். ஆனால் இன்னமும் காரியம் அதுவல்ல, இந்த வாலிபனும் கூட அந்நாட்களின் மார்க்கத்தில் போதிக்கப் பட்டவனாக இருந்தான், ஆனால் அப்படியிருந்தும் அவனிடத்தில் நித்திய ஜீவன் இல்லை, ஆகவே அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று அவன் அறிய விரும்பினான். இது மட்டுமாக அவன் வெற்றிகரமாக வழிநடத்தப் பட்டான். 21ஆனால் நித்தியஜீவனானது, அவனை எதிரிட்டு குறிக்க வந்த போது, அவனை நித்திய ஜீவனுக்குள் வழிகாட்ட, அல்லது வழிநடத்தப்பட மறுத்துவிட்டான். அவனுடைய மற்ற வழி நடத்துபவர்கள், அவன் மேல், அவ்வளவு பிடிப்பையுடையவர்களாய் இருந்தபடியால், அதை நெகிலவிட பிரியம் இல்லாதவனாக இருந்தான், பாருங்கள். அது ஏதோ சகோதரன். பிரான்ஹாம் சொல்லுகின்ற காரியம் போன்று உள்ளது, உங்களுக்கு மிகவும் ஆழமாய் உள்ளது பாருங்கள். கல்வி அருமையானது தான், நீ பள்ளிக்கு போய் கற்றுக்கொள்ள வேண்டும். அது நல்லதுதான், ஆனால் அது உன்னை இரட்சிக்காது, அதிகமான பணத்தை உடையவர்களாய் இருப்பது நல்லது தான், உங்களுடைய பிள்ளைகளை அழகாய் வளர்க்கலாம், அவர்களுக்கு நல்ல ஆடைகளையும், காரியங்களையும் கொடுக்கலாம். உங்களுக்காகவும் காரியங்களுக்காகவும் அம்மாவும் அப்பாவும் செய்தது போன்று அது நல்லதுதான்.62. ஆனால் அது உன்னை இரட்சிக்காது, பாருங்கள். அல்லது ஒரு பரிசோதனை அறைக்குள் சென்று, வித்தியாசமான காரியங்களை இப்படி ஒன்று சேர்க்கலாம், அல்லது அணுக்களை பிரிக்கலாம், அல்லது அவர்கள் செய்வது எல்லாவற்றையும் கற்றறியலாம், அல்லது ஒரு ராக்கெட்டுக்குள்ளாக ஏறி, சந்திரனை நோக்கி போகலாம், ஆனால் அது உன்னை இரட்சிக்காது. நீங்கள் ஒரு காரியத்தை முகமுகமாய் சந்திக்க வேண்டும். ..நித்திய ஜீவனை.. அதை உனக்கு கொடுக்கக்கூடிய ஒரே ஒரு நபர் தான் இருக்கிறார். அம்மா அதை உனக்கு கொடுக்க முடியாது, அப்பா அதை உனக்கு கொடுக்க முடியாது, உன்னை வழிநடத்துபவரால் அதை உனக்கு கொடுக்க முடியாது, உன்னுடைய போதகர்களால் அதை உனக்கு கொடுக்க முடியாது, நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தாக வேண்டும். 22ஆனால் நித்தியஜீவனானது, அவனை எதிரிட்டு குறிக்க வந்த போது, அவனை நித்திய ஜீவனுக்குள் வழிகாட்ட, அல்லது வழிநடத்தப்பட மறுத்துவிட்டான். அவனுடைய மற்ற வழி நடத்துபவர்கள், அவன் மேல், அவ்வளவு பிடிப்பையுடையவர்களாய் இருந்தபடியால், அதை நெகிலவிட பிரியம் இல்லாதவனாக இருந்தான், பாருங்கள். அது ஏதோ சகோதரன். பிரான்ஹாம் சொல்லுகின்ற காரியம் போன்று உள்ளது, உங்களுக்கு மிகவும் ஆழமாய் உள்ளது பாருங்கள். கல்வி அருமையானது தான், நீ பள்ளிக்கு போய் கற்றுக்கொள்ள வேண்டும். அது நல்லதுதான், ஆனால் அது உன்னை இரட்சிக்காது, அதிகமான பணத்தை உடையவர்களாய் இருப்பது நல்லது தான், உங்களுடைய பிள்ளைகளை அழகாய் வளர்க்கலாம், அவர்களுக்கு நல்ல ஆடைகளையும், காரியங்களையும் கொடுக்கலாம். உங்களுக்காகவும் காரியங்களுக்காகவும் அம்மாவும் அப்பாவும் செய்தது போன்று அது நல்லதுதான். ஆனால் அது உன்னை இரட்சிக்காது, பாருங்கள். அல்லது ஒரு பரிசோதனை அறைக்குள் சென்று, வித்தியாசமான காரியங்களை இப்படி ஒன்று சேர்க்கலாம், அல்லது அணுக்களை பிரிக்கலாம், அல்லது அவர்கள் செய்வது எல்லாவற்றையும் கற்றறியலாம், அல்லது ஒரு ராக்கெட்டுக்குள்ளாக ஏறி, சந்திரனை நோக்கி போகலாம், ஆனால் அது உன்னை இரட்சிக்காது. நீங்கள் ஒரு காரியத்தை முகமுகமாய் சந்திக்க வேண்டும். ..நித்திய ஜீவனை.. அதை உனக்கு கொடுக்கக்கூடிய ஒரே ஒரு நபர் தான் இருக்கிறார். அம்மா அதை உனக்கு கொடுக்க முடியாது, அப்பா அதை உனக்கு கொடுக்க முடியாது, உன்னை வழிநடத்துபவரால் அதை உனக்கு கொடுக்க முடியாது, உன்னுடைய போதகர்களால் அதை உனக்கு கொடுக்க முடியாது, நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தாக வேண்டும். அவர் ஒருவரால் மட்டுமே அந்த பகுதியை கொடுக்க முடியும், உன்னுடைய ஆசிரியரால் உனக்கு கல்வி அறிவை கொடுக்க முடியும், அவரால் உனக்கு போதிக்க முடியும், ஆனால் நீ கற்றறிய வேண்டும். உன்னுடைய தாயாரால் நடக்க சொல்லி தர முடியும், ஆனால் நீ அதை கற்றறிய வேண்டும். நீ எப்படி வர்த்தகனாக, அல்லது ஏதாவதாக இருக்கலாம் என்று உனக்கு உன் தகப்பனார் போதிக்க முடியும். ஆனால் நீ அதை கற்றறிய வேண்டும். ஆனால் இயேசுவானவரால் மட்டுமே நித்திய ஜீவனை கொடுக்க முடியும்.. புரிகின்றதா.66. ஆனால் நீங்கள் பாருங்கள். ஜீவியம் இங்கே முடியும்போது எல்லாம் அவ்வளவுதான், உங்களுக்கு புரிகின்றதா? முதியோர்களே உங்களுக்கு புரிகின்றதா? பாருங்கள். எல்லாம் அவ்வளவுதான். ஆனால் அப்படியே இருக்குமானால், நித்திய ஜீவனுக்காக நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டாகத்தான் வேண்டும். இயேசுவானவர் மட்டுமே உன்னை அதற்குள் வழி நடத்த முடியும், இந்த வாலிப மனிதன் இந்தக் காரியங்கள் யாவற்றையும் தன்னுடைய பள்ளியிலேயும், அவனுடைய பெற்றோர்கள் மூலமாய் எல்லாவற்றையும் அடைந்திருந்தாலும், அவன் அடைந்து இருக்கக்கூடிய மிகவும் பெரிதான காரியத்தை அவன் இழந்து போனான், அதாவது பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுவதை இழந்து போனான். 23வந்து என்னைப் பின்பற்று என்று இயேசு சொன்னார். பள்ளியிலிருந்து வெளியேறுகின்றதான பெண்களாகிய நீங்கள் உங்களில் சிலர் சீக்கிரத்தில் கல்லூரிப்படிப்பை முடிக்கலாம். வாலிப பையன்களே, இருக்கின்ற வகைகளில் மிகப்பெரிய வழிநடத்தும் தன்மை இயேசு கிறிஸ்துவே. அதுவே நித்தியஜீவனுக்கான வழிநடத்தும் தன்மை. இப்பொழுது இந்த வழி நடத்தும் தன்மை ஒவ்வொரு மானிட வர்க்கத்தையும் குறுக்கிடுகிறது. அவர்களுக்கு தெரிந்து கொள்ளும் படியான ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது. நமது ஜீவியத்தில் இருக்கின்ற தான, ஒரு பெரிய காரியம் அதுதான் தெரிந்துகொள்ளுதல். உங்களுக்கு தெரியும், அப்பாவும் அம்மாவும் ஒரு நல்ல சிறு பையனையோ, பெண்ணையோ, உடையவர்களாக இருக்க தெரிந்து கொண்டார்கள். உன்னைப் போன்று நீங்கள் யாவரும், பின்னர் கொஞ்சம் கழித்து ஒரு ஆசிரியரிடமிருந்து கற்றறிவதா வேண்டாமா என்பதை தெரிந்துகொள்ள உனக்கு உரிமை உண்டாயிருக்கிறது. ஆசிரியரால் உனக்கு சொல்லித்தர முடியும், ஆனால் நீ ஒரு கெட்டவனாக இருந்து கொள்ளாமலேயே இருக்கலாம். ஒரு கெட்ட ஒரு சிறு பெண்ணாக செவி கொடுக்காமல் இருக்கலாம். நீங்கள் சிறியவர்களாக இருந்தும் அதை செய்ய உங்களுக்கு ஒரு தெரிந்து கொள்ளுதல் உண்டு. 24உன்னுடைய பள்ளிக்கூட ரிப்போர்ட் அட்டையில் ('A') வாங்கி இருக்கின்றாயா? என்று தாயார் கேட்கலாம், இல்லை எனக்கு மிகவும் மோசமாகத் தான் கிடைத்தது, பாருங்கள். தாயார் சொல்லலாம், இப்பொழுது நீ படிக்கத்தான் வேண்டும், அப்படியானால் நீ இதை செய்யத்தான் வேண்டும், அப்பா சொன்னது போன்று, அம்மா சொன்னது போன்று படித்துக்கொண்டே இரு பாருங்கள். நீங்கள் படிக்கத்தான் வேண்டும் ஆனால் உனக்கு ஒரு தெரிந்து கொள்ளுதல் உண்டு. நீங்கள் அதை செய்யலாம் அல்லது அதை செய்யாமலும் இருக்கலாம். எனக்கு வேண்டியது இல்லை என்று நீங்கள் சொல்லலாம், பாருங்கள். உனக்கு ஒரு தெரிந்து கொள்ளுதல் உண்டு, கொஞ்சகாலம் கழித்து நீ எந்த பெண்ணை மணந்து கொள்ள போகின்றாய் எந்த பையனை மணந்துகொள்ள போகின்றாய் என்று ஒரு தெரிந்து கொள்ளுதல் உண்டாய் இருக்கப் போகின்றது. ஜீவியத்தின் எல்லா இடத்திலும் உனக்கு ஒரு தெரிந்து கொள்ளுதல் உண்டு. 25பின்னர் உனக்கு இன்னொரு தெரிந்துகொள்ளுதல் உண்டாயிருக்கிறது, அதாவது இந்த ஜீவியத்திற்கு பிறகு, நீ ஜீவிக்க விரும்புகிறாயா? இல்லையா? அல்லது ஒரு நல்லவனாக பேர் பெற்றவனாக இருக்க விரும்புகிறாயா, ஒரு சினிமா நட்சத்திரமாகவோ, அல்லது ஒரு நடனமாடுபவராகவோ, அல்லது வேறு எதுவாகவோ இருக்க விரும்புகிறாயா என்று தெரிந்து கொள்ள வேண்டும். கொஞ்ச நேரத்திற்கு முன்னர் இந்த சின்ன பெண்கள் அவர்களுடைய அழகான குரலில் பாடினார்களே, அந்தப் பிள்ளையானது குரலை பண்படுத்த வேண்டும். அவளொரு அரங்க பாடகியாகவோ அல்லது ஏதோ பாடகியாகவோ ஆகலாம். நான் இந்த பையனுடைய குரலையும் கேட்கிறேன். தன்னுடைய புத்திர சுவிகாரத்தை விற்று போட்ட எல்விஸ் பிரஸ்லியை (Elvis Presley) போல இருக்கலாம், பாருங்கள். உங்களுக்கு அது வேண்டாம். அது தேவன் உனக்கு கொடுத்ததான ஒரு தாலந்து, நீ அந்த தாலந்தை எங்கே கொண்டுபோய் உபயோகிக்க போகின்றாய் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். தேவனுக்காகவா, அல்லது பிசாசிற்காக அதை உபயோகிக்க போகின்றாயா என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். புரிகின்றதா. சகோதரன், லியோ. இங்கே இருக்கின்றார். உங்களுடைய சகோதரனை பாரும், இங்கே வந்து ஜனங்களை நடத்தும் படியான ஒரு தாலந்து இப்பொழுது அவரிடத்தில் இருக்கின்றது, அவர் அதைக்கொண்டு என்ன செய்யப் போகின்றார், அவர் வியாபாரத்தில் போய் ஒரு கோடீஸ்வரனாக ஆக்கிக்கொள்ள போகின்றாரா, அல்லது ஜனங்கள் ஒன்று கூட விரும்புகின்ற, உங்களுடைய சிறுபிள்ளைகள் யாவரையும் ஒன்று கூட விரும்புகின்ற, ஒரு வீட்டை இங்கே உன்டாக்க போகின்றாரா புரிகின்றதா. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். நாம் ஒவ்வொருவரும் ஒரு தெரிந்து கொள்ளுதலை செய்யவேண்டியவர்களாய் இருக்கிறோம். 26அது நம்மை... நாம் யாவரும் இந்த ஒரு காரியத்தினால் குறுக்கிட படுகிறோம், நாம் நித்திய ஜீவனை குறித்து என்ன செய்யப் போகின்றோம், இதற்குப் பின்னர் ஜீவிக்க போகின்றோமா அல்லது இல்லையா? அப்படியானால் அதைப் பெற்றுக்கொள்ள நாம் இயேசுவினிடத்தில் வந்துதான் ஆகவேண்டும். தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை அந்த ஒரு காரியத்தை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். அவர் ஏதோ காரியத்தை நம்மேல் பலவந்தம் பண்ணவில்லை, நாம் நம்முடைய சொந்த தெரிந்து கொள்ளுதலை செய்யும்படி நம்மை அனுமதிக்கிறார். ஆகவே நீ பலவந்தம் பண்ணப் படுவதில்லை, ஆனால் உன்னுடைய சொந்த தெரிந்து கொள்ளுதலை செய்யவேண்டியிருக்கிறது. இப்பொழுது முதியோர் எல்லாருமாக பிள்ளைகள் எல்லாருமாக சில நிமிஷங்களுக்கு இதை நாம் பின்பற்றுவோம். இந்த வாலிபனை நாம் பின்பற்றுவோம், அவன் செய்த தெரிந்து கொள்ளுதல் அது அவனை எங்கே வழிநடத்தியது என்று பார்ப்போம். அழகான குரல்களை உடைய இந்தப் பெண்கள், இந்த வாலிப பையன்கள், ஒருகால் நீங்கள் வளர்ந்து உங்களுக்கு ஒரு அருமையான குரல் இருக்கலாம், அந்த ஒரு காரியத்தை எடுத்து கொள்ளுங்கள். சங்கீதம் ஒரு கால் நீங்கள் ஒரு நாளில் அதை குறித்து சிந்திக்கலாம், எல்விஸ் பிரஸ்லி. (Elvis Presley). என்று அழைக்கப்படுகின்ற இந்தப் பையனை உங்களுக்கு தெரியுமா? என்னுடைய ஒளிநாடாக்களை கேட்டிருக்கிறீர்கள், நீங்கள் கேட்டு இருப்பீர்கள் நான் அவரை தரை குறைவாய் சொல்லவில்லை, ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள தான ஒரு வாய்ப்பு அவனுக்கும் உண்டாயிருந்தது, புரிகின்றதா. 27என்ன, தன்னால் பாடமுடியும் என்பதை அவன் கண்டறிந்தான். அவன் என்ன செய்தான் என்பதை கவனியுங்கள். அதே காரியத்தை தான் யூதாசும் செய்தான். யூதாஸ் காரியோத் என்பவன் இயேசுவை விற்று போட்டான். இயேசு அந்த நல்ல பையனுக்கு சாரிரத்தை கொடுத்தார் (Good Voice) அவன் என்ன செய்தான், அப்படியே திரும்பி அதை பிசாசுக்கு அதை விற்று போட்டான். பாருங்கள். அவன் பாதையின் முடிவிற்க்கு வந்தாக வேண்டும். பாருங்கள். அவன் இயேசுவோடு கூட நடக்க மறுத்தான், இங்கே இந்த வாலிபன் ஆஸ்தியுள்ள வாலிப தலைவன், அதே காரியத்தை தான் இவனும் செய்தான். நாம் தொடர்ந்து போய் அவன் என்ன செய்தான் என்று பார்ப்போம். ஐயம் ஒன்றுமில்லை, அவனுக்கு இருந்த மேன்மையோடு, ஒருக்கால் கவர்ச்சியான வாலிபனாக இருக்கலாம். கருத்த மயிர் கீழாக வாரி நல்ல ஆடைகளை அணிந்தவனாய் இருக்கலாம், வாலிபப் பெண்கள், அழகான வாலிபன் என்றால், அவனாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினர். ஓ அப்படி நினைத்திருப்பார்கள், அவன் ஒரு கால் அவர்களிடத்தில் கையையாட்டி காட்டியிருக்கலாம், அவர்களும் அவனோடு சரசமாடி இருப்பார்கள். 28தான் ஒரு பெரிய மனிதன் என்று அவன் தன்னைத் தான் நினைத்தான், பாருங்கள். அவன் கவர்ச்சியாய் இருந்த படியினாலே அவன் வாலிபனாக இருந்த படியினாலே, அவன் பாதையின் முடிவை கீழாக நோக்கி பார்க்காமல் இருந்தால், அவன் வெறுமனே இங்கே மட்டும் தான் பார்த்தான். நான் வாலிபன் நான் கவர்ச்சியாய் உள்ளேன் நான் ஐசுவரியவான். எனக்கு என்ன தேவையாய் இருந்தாலும் என்னால் வாங்க முடியும், என்னால் இந்த பெண்களையும் பையன்களையும் எடுத்துக்கொள்ள முடியும், அவர்கள் எல்லாருக்கும் என்னை பிடிக்கும், நான் ஒரு பெரிய மனிதன் என்று அவர்கள் அறிவார்கள், பாருங்கள். பாருங்கள் இவைகளெல்லாம் அவனிடத்தில் இருந்தது, அவன் அவனுடைய தகப்பனார் செய்யும் படி, சொன்னவைகள் எல்லா காரியங்களையும், அவன் அப்படியே செய்தான். நான் அதிக பக்தியுள்ளவன் நான் சபைக்கு போகிறேன், இப்பொழுது அவன் அதை பின்பற்றி போய் இருக்கலாம், மிகவும் பேர் போனவன், பணக்காரன். புகழ் வாய்ந்தவன் சரியாக இந்த நாளை போன்று, சினிமா நட்சத்திரமோ அல்லது அதைப் போன்று ஏதோவாகவோ உனக்கு சந்தர்ப்பங்கள் உள்ளது போன்று, இன்றைக்கு சிறு பிள்ளைகளில் பெரும்பான்மையோர் அவரிடம் பேசி பாருங்கள், இயேசுவைக் குறித்து அவர்கள் அறிந்திருப்பதை காட்டிலும், அதிகமாக அவர்கள் சினிமா நட்சத்திரங்களை குறித்து அறிந்துள்ளார்கள். பிள்ளைகளாகிய நீங்கள் இயேசுவை குறித்து கற்றுக் கொள்கிறீர்கள், அவர்கள் உட்காருகின்ற இடத்திலே சினிமா நட்சத்திரங்கள் அல்லது வேறு ஏதோ காரியங்களை விளையாட்டாக விளையாடுகிறார்கள். அவர்களுக்கு நடிகர்களையும் அவர்களைக் குறித்த எல்லா காரியங்களையும் அறிவார்கள், அவை எல்லாவற்றையும், அதைக்காட்டிலும் அதிகமாக அறிந்துள்ளார்கள், வேதத்தை குறித்து அவரிடத்தில் சொல்லுங்கள் வேதத்தை குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, பாருங்கள். அதைக் தவறான தெரிந்துகொள்ளுதலை செய்கிறது. 29இப்பொழுது சில பாடகர்கள் தங்களுடைய தேவனால் கொடுக்கப்பட்ட தாலந்தை புகழுக்காக விற்றுப் போடுகிறார்கள். பின்னர் நாம் அவனை வாழ்க்கையின் கடைசியில் பார்ப்போம், இன்னும் கொஞ்ச தூரம் தொடர்ந்து போய் அவனைப் பார்ப்போம், இந்த வாலிபனை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்று உங்களுக்கு தெரியுமா. அவனும் இன்னும் அதிக வெற்றியைக் கண்டான். ஆகவே சில நேரங்களில் இப்படிப்பட்ட காரியங்கள், நீங்கள் சரியான தெரிந்து கொள்ளுதலை செய்தீர்கள் என்று அர்த்தமல்ல, அவன் என்ன செய்தான் என்று உங்களுக்கு தெரியுமா, அவன் வெளியே போய் தன் இஷ்டப்படியாய் செய்தான், பெரிய விருந்துகளை செய்தான், அவன் அதிகமான பணத்தையும் பெண்கள் மற்ற காரியங்கள் மேல் செலவு செய்தான், பின்னர் அவன் திருமணம் செய்துகொண்டு ஒருக்கால் ஒரு குடும்பம் அவனுக்கு இருந்திருக்கலாம். அவன் புதிய களஞ்சியங்களையும், மற்ற கட்டிடங்களையும் கட்டும் படிக்கு அவன் ஐசுவரியம் அவ்வளவு மிகுதியாய் ஆனது. அவன் சொன்னான், “நீங்கள் பாருங்கள் நான் இயேசுவைப் பின்பற்றி போகவில்லை, என்னிடத்தில் எனக்கு என்ன உண்டு என்று பாருங்கள்” என்றான். 30ஜனங்கள் அப்படி சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம் நான் கேட்டிருக்கிறேன், பாருங்கள். அவர் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். அதனுடைய அர்த்தம் அதுவல்ல புரிகின்றதா, கொஞ்ச காலம் கழித்து அவனுடைய களஞ்சியங்கள் எல்லாம் மிகுதியாய் வழியத் தொடங்கின, அவன் ஆத்துமாவே உன்னுடைய இளைப்பாறுதலை எடுத்துக்கொள், என்னிடம் அவ்வளவு பணமும் அவ்வளவு வெற்றியும் இருக்கிறது, நான் அவ்வளவு பெரிய ஒரு மனிதன், எல்லா கிளப்புகளிலும் (Club) எனக்கு பங்கு உண்டு, உலகத்தின் ஐசுவரியங்கள் என் கரங்களில் இருக்கின்றது. மிகுதியான நிலங்களும், மிகுதியான பணமும் எனக்கு சொந்தம், நான் ஒரு நல்ல அருமையான மனிதன் என்ன எல்லாருக்கும் என்னை பிடிக்கும், ஆனால் உங்களுக்குத் தெரியுமா வேதம் அது சொல்லுகிறது. அந்த இரவு, “தேவன் அவனிடத்தில், நான் உன் ஆத்துமாவை எடுக்கப் போகிறேன்” என்று சொன்னார். 31பின்னர் என்ன நடந்தது, அங்கே ஒரு பிச்சைக்காரன் இருந்தான், ஒரு ஏழையான வயதான கிழவன் அவனுடைய வெளி வாசலில் கிடந்தான். அங்கு எங்கோ அந்த எருசலேமிலே, அவர்கள் அங்கே வீட்டின் மாடியிலே சாப்பிட்டார்கள். அந்த விதமான ரொட்டி துணிக்கைகளும் இறைச்சி துணிக்கைகளும் அவர்கள் அதை கீழே போடும் போது, அவைகள் தரையிலே வந்து விழும், அவைகளை அவர்கள் திரும்ப எடுப்பதில்லை ஏனென்றால் எருசலேமில் உள்ள எல்லாம், அந்தப் பழைய பட்டினம் அது, ஒரு சிறு காரியம் ஆச்சரியமாக சொல்வதற்க்கு ஒன்றுமில்லையே அவைகள் (FOP). ரொட்டியின் மீது ஈ, மாமிசத்தின் மீது ஈ, வெண்ணையின் மீது ஈ, எல்லாவற்றின் மேலும் ஈ, அவைகள் அங்கே வீதிகளிலும் சாக்கடைகளிலும், எல்லா காரியங்களிலும் இருக்கும் அப்படியே உள்ளே பறந்து வந்து அப்படியே சாப்பாட்டின் மேல் உட்காரும். ஆகவே இந்த ஜனங்கள் அவர்களுடைய வீட்டின் மேலேறிகொள்வார்கள், அங்கே சாப்பிடுவார்கள், அப்பொழுது இப்படி மேலும் துணிக்கைகளை பெறுக்கி தள்ளுவார்கள், வீதிகளில் இருக்கும் நாய்கள் அந்த துணிக்கைகளை சாப்பிடும். 32அந்த ஏழை வயதான கிறிஸ்தவன் அங்கே வீதியிலே இருந்து, அவனுடைய தட்டிலிருந்தும் படுக்கையில் இருந்தும், அவனுடைய மேஜையிலிருந்தும் துணிக்கைகளை சாப்பிடும்படி அனுமதித்தான். அதன் பின்னர் அவன் உள்ளே வந்தபோது எருசலேமுக்குள்ளாக அவனுக்கு (லாசரு) பருக்கள் உண்டானது அந்தப் பருக்களின் மேல் போட்டு மூடுவதற்கு அவனிடத்தில் ஒன்றுமில்லை அவனுடைய பெயர், லாசரு. அவன் சொஸ்த்தம் அடையும்படியாக நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கினது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு உங்களுக்கு தெரியுமா இந்த ஆஸ்தி உள்ள மனிதன், அவன் சுகவீனமானான். எல்லாவித மருந்துகளையும் வாங்கும் படியாக அவனிடம் பணம் உண்டு என்று கண்டான். எல்லாவிதமான வைத்தியர்களும் அவனுக்கு இருந்தனர், ஆனால் உங்களுக்கு தெரியுமா சில நேரங்களில் வைத்தியர்களால் நமக்கு உதவி செய்ய முடியாமல் போய்விடும். மருந்துகள் நமக்கு உதவி செய்ய முடியாமல் போகும். ஒன்றும் நமக்கு உதவி செய்ய முடியாமல் போகும், நாம் தேவனுடைய இரக்கத்தைதான் நம்பி இருக்கின்றோம். அவன் தன்னுடைய பாதையின் முடிவுக்கு வந்தான். வைத்தியர்களால் அவனுக்கு உதவி செய்ய முடியவில்லை. நர்சுகளால் உனக்கு உதவி செய்ய முடியவில்லை. மருந்தினால் அவனுக்கு உதவி செய்ய முடியவில்லை. இன்று அவன் மரித்தான். அவனுடைய ஆத்துமா அப்படியே சரீரத்தை விட்டு வெளியேறின பிறகு, பாருங்கள். 33அது அவனுடைய எல்லா பணத்தையும், அவனுடைய எல்லா கல்வியையும், அவனுக்கிருந்த எல்லா காரியங்களையும் அவனுடைய எல்லா புகழையும் இங்கே விட்டு சென்றது. அவர்கள் அவனுக்கு மகா பெரிய ஒரு அடக்க ஆராதனை செய்தார்கள். ஒருக்கால் கொடியானது அரைக்கம்பத்தில் பறந்திருக்கலாம். அந்த பட்டினத்தின் மேயர் அங்கு வந்து இருக்கலாம், போதகர்கள் வந்திருக்கலாம், நம்முடைய சகோதரன் இப்பொழுது மகிமைக்குள்ளாக போயிருக்கிறார் என்று சொல்லி இருப்பார்கள். ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது என்றால், அவன் பாதாளத்திலே வேதனையில் தன் கண்களை ஏறெடுக்கும்போது, அந்த ஆழிற்கு (பெரும்பிளப்புக்கு) அப்புறமாக அவன் தூரத்தில் நோக்கி பார்த்தபிறகு வாசலண்டையிலே பருக்களால் நிறைந்த அந்த பிச்சைக்காரனை கண்டான். அங்கே பரலோகத்திலே கண்டான், அவன் சத்தமிட்டான், கொஞ்சம் தண்ணீரோடு கூட லாசருவை இங்கே அனுப்புங்கள் இந்த அக்கினி தழல் எனக்கு வேதனையை கொடுக்கிறது என்று சத்தமிட்டான். ஓ முடியாது என்று சொல்லப்பட்டது, பாருங்கள். அவன் ஜீவியத்தில் அவன் தவறான தெரிந்து கொள்ளுதலை செய்தான், புரிகின்றதா. அவனுடைய ஜீவியத்தில் இருந்து வெளியே போகும் படியான பாதையின் இறுதிக்கு அவன் வந்தபோது, அவன் மார்க்கத்தால் அவன் வழி நடத்த பட்டவனாய் இருந்தான். அவன் கல்வியினால் வழி நடத்த பட்டவனாய் இருந்தான். அவனுடைய வெற்றியின் செல்வாக்கிலே வழி நடத்த பட்டவனாய் இருந்தான். ஆனால் நீங்கள் பாருங்கள் அவன் கரம் நீட்டி பற்றிக்கொள்ள அவனுக்கு அங்கே ஒன்றும் இல்லை. அந்தக் காரியங்கள் யாவும் அங்கு முடிவடைந்துவிட்டது. உங்களுக்கு புரிகினறதா. சின்ன பையன்களே, முதியவர்களே நான் என்ன சொல்லுகிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா. அவனைப் பிடித்து தாங்கத்தக்கதாக அவனுக்கு அங்கே ஒன்றும் இல்லை. அவனுடைய பணத்தினால் அவனைத் தாங்க முடியவில்லை, வைத்தியரோடு உள்ள அவனுடைய நண்பர்களால் அவனைத் தாங்க முடியவில்லை, மருந்தினால் அவனைத் தாங்க முடியவில்லை. அவனுடைய ஆசாரியன் அவனுடைய மார்க்கம் அவனைத் தாங்க முடியவில்லை. ஆகவே அவன் செய்யக்கூடியதாய் இருந்ததெல்லாம் ஒரே காரியம்தான். நித்திய ஜீவனாகிய அந்த இயேசுவை அவன் ஏற்றுக் கொள்ள மறுத்தான். 34ஆகவே அவன் என்ன செய்ய வேண்டிஇருந்தது, பாதாளத்தில் அவன் மரணத்தில் அமிழ்ந்து போக வேண்டிஇருந்தது. என்ன ஒரு பிராண ஆபத்தானத் தவறுதலை அந்த வாலிபன் செய்தான். அவன் இயேசுவை ஏற்றுக் கொள்ள, இயேசுவினால் வழிநடத்தப்பட எப்பொழுது மறுத்தானோ, அவன் அப்பொழுதே அதை மறுத்தான். இன்றைக்கு அநேக வாலிப ஜனங்கள் அந்தத் தவறைதான் செய்கிறார்கள். கர்த்தராகிய இயேசுவினால் வழிநடத்தப்பட மறுக்கிறார்கள். நித்திய ஜீவனை மறுக்கின்றதும் இயேசுவினால் வழி நடத்தப்படுவதை மறுக்கின்றதும், வந்து என்னை பின்பற்றி வா என்று அவர் சொன்ன போது மறுத்ததும். என்னே ஒரு பிராண ஆபத்தான காரியம் என்று நாம் இப்பொழுது கண்டோம். இந்த கவர்ச்சியான சின்ன மனிதன் இன்று மதியம் என்ன சொன்னான் என்று பாருங்கள். நீங்கள் பள்ளியைவிட்டு வெளிவரும்போது, பள்ளியை விட்டு விலகும் போது, உனக்கு இன்னொரு வழிநடத்துபவர் தேவை, ஆனால் அது இயேசுவாய் இருக்கட்டும். இயேசு தான் வேதமாய் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இதுதான் நமக்கு இயேசுவின் ஜீவியமும் அவருடைய கற்பனைகளுமாய் எழுத்து வடிவில் உள்ளது. ஆகவே நாம் காணும்படியாக இதற்குள்ளாக நான் பார்க்க வேண்டும். இதுதான் வரைபடம், நாம் பின்பற்றி போகத்தக்கதாக நித்திய ஜீவனை நாம் துவக்க, அவர் நமக்கு சொன்ன வரைபடம் இதுதான். இப்பொழுது இந்த மனிதன் எழுந்து போனான் என்று நாம் இங்கே பார்க்கிறோம். இப்பொழுது நாம் இன்னொன்றைப் பார்ப்போம். சரியான விதமாக போக நிச்சயித்த இன்னொரு ஐஸ்வரியம் உள்ள தலைவனை குறித்து பார்க்க உங்களுக்கு அவகாசம் இருக்கின்றதா. விருப்பம் இருக்கின்றதா, அதைக் கேட்க உங்களுக்கு பிரியமா? சரி. 35இப்பொழுது நாம் அதை முயற்சி செய்து பார்ப்போம், இதே காரியத்தால் குறுக்கிட்டுபட்ட இன்னொரு ஆஸ்தி உள்ள வாலிப தலைவனை நாம் எடுப்போம். இப்பொழுது அவன் எங்கே போனான் என்று நாம் பார்த்தோம், அவன் ஒரு நல்ல ஜீவியம் தான் செய்தான், ஆனால் மரித்து பாதாளத்திற்கு போனான். இப்பொழுது நாம் இங்கே அதே காரியத்தினால் குறுக்கிடப்பட்ட இன்னொரு வாலிபனை குறித்து நாம் பேசப் போகின்றோம். அவன் ஒரு பணக்காரன், ஒரு வாலிபன், ஒரு தலைவன். ஆனால் அவன் கிறிஸ்துவின் வழி நடத்துதலை ஏற்றுக் கொண்டவன். கொஞ்சம் முன்னதாக அந்த சிறு பையன் நமக்கு சொன்னது போன்று நாம் வழிநடத்தப்பட அனுமதிக்க வேண்டும். அவன் அதை ஏற்றுக்கொண்டான். 36இதற்கான வேத வார்த்தைகள், நான் பேசி முடித்த பிறகு நீங்கள் அதை பார்க்க வேண்டுமானால், அது எபிரேயர். அதிகாரம் - 23,29ம். வசனம் வரை உள்ளது, நாம் அதை வாசிக்கட்டும் அது சரிதானே, கொஞ்ச நேரம் என்னோடு பொறுமையாய் இருங்கள் இருப்பீர்களா, சொல்வதை கவனமாய் கேளுங்கள் செய்வீர்களா, நாம் அதை வாசிப்போம். அப்போது நீங்கள் சகோதரன். பிரான்ஹாம்.. இதை வேதத்திலிருந்து வாசித்ததை நான் கேட்டேன், என்று சொல்வீர்கள் புரிகின்றதா. அது அங்கேயே இருக்கின்றது என்று அப்பொழுது நீங்கள் அறிவீர்கள். இது நான் சொன்னது அல்ல, இது அவர் சொன்னது. இந்த நல்லவனை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்று இப்பொழுது நீங்கள் கவனிங்கள். புரிகின்றதா. இப்பொழுது பாருங்கள். 37மோசே பிறந்த போது அவனுடைய தாய் தகப்பனார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதம் ஒளித்து வைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, கவனிங்கள் அநித்தியமான பாவ சந்தோசங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். காலங்களுக்கு முன்பாக மோசேயின் நாட்களில் அவர் அப்பொழுதும் கிறிஸ்துவாக இருந்தார். புரிகின்றதா. அவர் ஒருவரே நித்திய ஜீவனை உடையவராக இருந்தார். பாருங்கள். இனி வரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.இப்பொழுது அதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா, இதுதான் அதனுடைய அர்த்தம், மோசே மிகவும் ஏழ்மையான ஒரு பையனாக பிறந்தான். அவனுடைய தகப்பனார் பெயர், அம்ராம். அவனுடைய தாயின் பெயர், யோகெபேத். அவர்கள் மிகவும் ஏழைகள் ஆனால் கிறிஸ்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்தார்கள் அவர்கள் அடிமைத்தனத்திற்குள்ளாக இருந்தார்கள். அந்தப் பழைய ராஜாவுக்காக அவர்கள் களிமண்ணினால் கற்கள் முதலானவைகளை உண்டு பண்ணினார்கள். என்னவென்று உங்களுக்கு தெரியுமா அந்த ராஜாவின் குமாரத்தி ஒரு நாள் ஆற்றங்கரைக்கு போனாள். மோசேயின் தாயாகிய யோகெபேத், அந்த விதமாக மிதக்கக்கூடிய ஒரு பெட்டியிலே அவனை ஆற்றில் விட அவனை கொண்டு போனாள், அந்த வயதான முதலைகள் எல்லா சிறு குழந்தைகளையும் தின்றுவிட்டது, பிள்ளைகளை ஆற்றில் தூக்கி எரிவதன் மூலம் அவர்களை கொன்றார்கள். 38ஆனால் அவள் சரியாக அவனை அங்கேயே போட்டாள். ஆனால் அந்த முதலைகள் அவனிடம் நெருங்காதபடிக்கு அவள் என்ன செய்தாள் தெரியுமா, இந்த சிறிய மிதக்கும் பேழையை செய்து அதை சுற்றிலும் கீழ் பூசி அதில் அவனை படுக்க வைத்தாள் அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா, அதுதான் டர்பெண்டைன் ஆயில் (Turpentine) ஒரு முதலை அருகில் வந்து சொல்லும். ம்ம்ம், “ஒரு கொழுத்த எபிரேய பிள்ளையை நான் அவனை சாப்பிடுவேன்” என்று. அந்த விதமாக அழுவதை கேட்கின்றது. அங்கே அது கிட்ட போய், “ஊஸ்ஸ்ஸ் என்ன நாற்றம் புரிகின்றதா” பாருங்கள். அந்தப் பிள்ளையை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று தாயார் வழி நடத்தப்பட்டால். ஆகவே முதலை அதைவிட்டு பின் சென்றது. அதனோடு செய்ய அதற்கு ஏதும் விருப்பமில்லை, அதன் பின்னர் மோசேயை தொடர்ந்து அந்த பெட்டிக்குள் இன்னும் கொஞ்சதூரம் சென்றான். அவனுடைய சிறிய சகோதரி, மிரியாம். என்று பெயரிடப்பட்டவள். கரையோரமாக அவன் பின் தொடர்ந்து போய் அவனைக் கவனித்துக் கொண்டே இருந்தாள். அதன் பின்னர் பார்வோனின் குமாரத்தி வெளியே வந்து அவனை எடுக்கப் போனாள். உங்களுக்குத் தெரியும் அவனை வெளியே எடுத்தாள். உங்கள் எல்லாருக்கும் தெரியும் உலகத்தில் உள்ள பிள்ளைகளில் நீ தான் மிகவும் அழகானவள் என்று உன் தாயார் நினைக்கிறாள், பாருங்கள். 39அவள் அதைத்தான் செய்ய வேண்டும். ஆனால் வேதம் சொல்லுகின்றது. இன்று சிறு பிள்ளையானது மிகவும் அழகுள்ளதாய் இருந்தது. உண்மையாகவே ஒரு சிகப்பான அழகான பையனாக இருந்தான். அவன் கீச் கீச், என்று கத்திக்கொண்டு தன் கை கால்களை உதைத்துக் கொண்டு இருந்தான். அவனுடைய தாய் அவனண்டையில் இல்லை என்று புரிகின்றதா. ஆகவே என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா. பின்னர் தேவன் அந்த ராஜாவின் குமாரத்திக்குள், பார்வோனின் குமாரத்திக்குள், ஒரு பிள்ளையின் பால் ஒரு தாய்க்கு இருக்கக்கூடிய, எல்லா அன்பையும் வைத்தார். அவளுடைய இருதயம் அப்படியே அன்பால் நிகழ்ந்தது. அவள் அது என்னுடைய குழந்தை என்றாள். ஆனால் உங்களுக்கு தெரியுமா. அவளொரு வாலிப பெண், பாருங்கள். அந்த நாட்களில் உங்களுக்கு இப்பொழுது இருப்பது போன்று குழந்தைகளை வளர்க்க, பால் புட்டிகள் கிடையாது. ஆகவே அவர்கள் போய் பால் கொடுக்கக்கூடிய நிலையிலுள்ள ஒரு தாயை கொண்டு வரவேண்டிய தாய் இருந்தது. ஆக மிரியாம் சரியான நேரத்தில் அங்கே இருந்தாள், “நான் போய் உங்களுக்கு ஒரு சரியான தாயாரை கொண்டு வருகிறேன்” என்றாள். 40சரி, “நீ போய் அவளைக் கொண்டு வா” என்றாள், மிரியாம் போய் யாரைக் கொண்டு வந்தாள் என்று உங்களுக்கு தெரியுமா. மோசேயின்னுடைய சொந்த தாயையே கொண்டு வந்தாள். அது சரி தான். ஆம். போய் கொண்டு வந்தாள் அது தான் ஞானம் இல்லையா. ஆக அதற்கு பிறகு அவள் போய் மோசேயின்னுடைய சொந்த தாயையே கொண்டு வந்தாள். அவள், “நான் இந்த பிள்ளையை கொண்டுபோய் இந்த பையனை உங்களுக்காக வளர்க்கிறேன்” என்றாள், ஏன்? என்று உங்களுக்கு தெரியுமா, “நீ இந்தப் பிள்ளையை வளர்க்கும் படியாக நான் உனக்கு வாரம் ஒன்றிர்க்கு முன்னூறு டாலர்கள் கொடுக்கப் போகிறேன். நீ அரண்மனையிலே தங்கலாம்” என்றாள். நீங்கள் தேவன் மேல் நம்பிக்கையாய் இருக்கும்போது அவர் எப்படி செய்வார் என்று பாருங்கள். நீ விசுவாசத்தினாலே நிச்சயமாய் இருக்கும்போது, அந்தப் பிள்ளை ஒரு தீர்க்கதரிசி பாருங்கள். அதை அவள் அறிந்திருந்தாள், ஆகவே அவர்கள் அரண்மனைக்கு உள்ளாக போனார்கள் அவள் மோசேயை அங்கே வளர்த்தாள். தாயார், பெற்றெடுத்த தாய் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்படி முன்னூரு டாலர்களை பெற்றுக்கொண்டால். அதைக்குறித்து சற்று சிந்தியுங்கள். பின்னர் உங்களுக்குத் தெரியும் கொஞ்ச காலம் கழித்து, அதன் பிறகு கொஞ்சகாலம் இப்படியாய் சென்றது. தானாகவே படிக்கவும் எழுதவும் தக்கதாக மோசே பெரியவனானான். 41எப்படி எழுத வேண்டும் என்றும் எப்படி படிக்க வேண்டும் என்றும் அவனுக்கு கற்றுக் கொடுத்தாள், அதன்பிறகு அவள் அவனிடத்தில், “மோசே நீ ஒரு சரியான பிள்ளையாக பிறந்தாய் நானும் உன் தகப்பனும் ஜெபித்தோம். நீ ஒரு தீர்க்கதரிசி என்று தேவன் எங்களுக்கு வெளிப்படுத்தினார். வரப்போகின்ற நாட்களிலே நீ ஜனங்களுக்கு ஒரு இரட்சகனாக (தீர்க்கதரிசியாக) இருக்க போகின்றாய் என்று சொன்னார்” என்று சொன்னாள். உங்களுக்குத் தெரியும் அவன் பெரியவனான போது, அப்பொழுது அவன் என்னவாய் இருந்தான். அவன் ராஜாவின் குடும்பத்துக்குள் சுவீகாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தான். ஓ. என்னே. அவன் அப்படியாகியிருக்க வேண்டியதில்லை, அவன் தன்னுடைய சொந்த ஜனங்களை வெளியே நோக்கி பார்த்தான். அவர்களுக்கு அணிந்துகொள்ள கூட ஆடைகளே கிடையாது, அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் அழுதுகொண்டு இருந்தார்கள், அந்தப் பழைய ஆளோட்டிகள் அவர்களை சவுக்கினால் அடித்து வேலை வாங்க அவர்கள் முதுகில் இருந்து இரத்தம் வெளி வந்தது. அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களும் மாமா சித்தப்பாக்களும், அம்மா அப்பா எல்லோரையும், சவுக்கால் அடித்து, களிமண் சேற்றினில் வேலை வாங்கினார்கள். ஆனால் மோசேயோ அவனுடைய உள்ளத்தின் ஆழத்தில் ஏதோ காரியத்தை உடையவனாய், அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜனங்கள் என்று அறிந்திருந்தான், அவன் அதை அறிந்திருந்தான். இப்பொழுது அவன் செய்யப் போகின்ற அடுத்த காரியம் என்னவென்றால் அவன் ராஜாவாக ஆகப் போகிறான். அவன் எல்லாவற்றின் மேலும் ராஜாவாக ஆகப் போகின்றான். ஒரு பெரிய ஐசுவரியவான். என்னே. எகிப்திலிருந்த பணமெல்லாம், எகிப்து அந்த நாளிலே உலகத்தையே ஆளுகை செய்தது. ஆனால் பாருங்கள். 42வேதம் சொல்லுகின்றது, அவன் நிந்தையை பாக்கியம் என்று எண்ணினான். அங்கே களிமண்ணில் வேலை செய்கின்ற கிறிஸ்தவனாய் இருப்பதை பாக்கியம் என்று எண்ணினான். அவர்கள், அவர்களை பரிகசித்தார்கள், அவர்களைப் பார்த்து கேலியாய் சிரித்தார்கள், அவர்களை உதைத்தார்கள். அவர்கள் மறுஉத்தரவாய் ஏதாவது சொல்வார்களானால், அவர்களை, அவர்கள் கொன்று போடுவார்கள். புரிகின்றதா. ராஜாவின் குமாரன் என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக அந்தக் கூட்டத்தாரோடு போவதை மோசே தெரிந்துகொண்டான். அதை நோக்கிப் பாருங்கள். பாருங்கள். ஏனென்றால் காலத்தின் கடைசியை அவன் கண்டான். அந்த வாலிபனை பாருங்கள். ஆனால் அவன் இயேசுவை கண்டான், நாம் அவரை தரிசனத்தில் காண்பது போன்று, கடைசி நேரம் தான் பலனை கொடுக்கப் போகின்றது. இவன் கிறிஸ்துவின் வழி நடத்தும் தன்மையை ஏற்றுக்கொண்டான். மோசே நிந்தையை ஒரு பெரிய பொக்கிஷமாக எண்ணினான். உங்களுக்கு தெரியும் சில நேரங்களில் பள்ளியில் உள்ள பிள்ளைகளாகிய சின்னப் பையன்கள். கெட்ட வார்த்தைகளை சொல்லி நீங்கள் யாவரும் அதையே சொல்லும் படியாக சொல்லுவார்கள். சின்ன பெண்களாகிய நீங்கள், சின்ன பெண்கள் கெட்ட வார்த்தையை சொல்லி, அதை நீங்கள் திரும்பிச் சொல்லும்படியாய் சொல்லுவார்கள். “முடியாது நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லுங்கள்”, அவர்கள் சொல்லுவார்கள், “ஆஆஆ நீ ஒரு கேடி என்று, உங்களைப் பார்த்து அப்படியே சொல்லிக்கொண்டு இருப்பார்கள்” என்று உங்களுக்கு தெரியும். நான் அதைச் செய்ய சந்தோஷப்படுகிறேன். ஏன் என்றால் பாருங்கள். மோசே அதைத்தான் செய்தான். எகிப்தில் உள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணினான், கிறிஸ்துவினால் வழிநடத்தப்பட்ட அவனை நாம் பின் தொடர்ந்து போய் அவன் என்ன செய்தான் என்று பார்ப்போம், பாருங்கள். 43இந்த வாலிபன் ஐசுவரியவானாக இருந்தான். அதாவது முதலாவது சொன்ன வாலிபன். ஆனால் அவனுக்கு கிறிஸ்து தேவையாய் இல்லை. இயேசுவைப் பின்பற்றி போகின்றவனாய் இருக்க அவனுக்கு விருப்பமில்லை. ஆகவே அவன் பேர் பெற்றவனாய் இருந்தான் என்று கண்டோம். ஒருக்கால் ஒரு சினிமா நாடகனாக இருக்கலாம், அல்லது பெரியவனாக இருந்திருக்கலாம், அவன் செய்யக்கூடியதும் செய்ய விரும்புகிறதும்மான எல்லா காரியங்களிலேயும் மகத்தானவனாக இருந்தான். ஆனால் அவன் மரித்த போதோ அவனை வழிநடத்திக் கொண்டு போக அவனுக்கு ஒருவருமில்லை. ஆகவே அவனுடைய கல்வி அது நல்லதுதான், அவனுடைய பணம் நல்லதுதான், ஆனால் மரணம் வந்தபோதோ எல்லாம் அவ்வளவுதான். இனி ஒரு போதும் அவைகளை எடுத்து அவனால் உபயோகிக்க முடியவில்லை. பரலோகத்திற்கு போகின்ற பிரயாணத்தை அவனால் கிரயம் கொடுத்து வாங்க முடியவில்லை. அவனால் முடியாமல் போயிற்று, அவருடைய படிப்பின் மூலமாக அவனால் பரலோகத்திற்கு போக முடியவில்லை. பாருங்கள். 44ஆனால் இந்த வாலிப மனுஷன் இவனுக்கு எல்லா காரியங்களும் இருந்தது. இவனுக்கு கல்வியும் கூட இருந்தது. பாருங்கள். அவன் சாமர்த்தியன், அவன் பள்ளிக்குப் போனான், அவருடைய தாயார் அவனுக்கு போதித்தாள், அவனுக்கு நல்லதொரு கல்வி இருந்தது. அவன் அவ்வளவு புத்தி சாதுரியமுள்ளவனாய் இருந்தான். ஏன்? எகிப்தியர்களுக்கு போதிக்கின்ற அளவுக்கு ஆளானான். அவருடைய உபாத்தியாயனுக்கே அவன் போதித்தான். அவ்வளவு புத்தி சாதுரியமுள்ளவன், அவன் எவ்வளவு புத்தி சாதுரியமுள்ளவன் என்று பாருங்கள். 45ஆனால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. அந்த எல்லா புத்தி சாதிரியத்துக்கு மேலாக. அவனுக்கு இருந்த எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்குள்ளிருந்த சாத்தியமானவைகளுக்கு மேலாக அப்படியிருந்தும். அவன் இயேசுவை பின்பற்றும் படியாக அவன் எல்லாவற்றையும் வேண்டாம் என்றும் விட்டேன் என்று சொல்லுகிறான். அவனுக்கு என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா. அவனை வெளியே துரத்தி விட்டார்கள். மற்றவர்களைப் போன்று அவனும் களிமண்ணில் வேலை செய்யும் ஒரு அடிமையானான்.103. ஆனால் ஒரு நாள் அவன் ஒரு வளர்ந்த மனிதனானபோது, வனாந்தரத்திற்கு பின்பக்கமாக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். ஆனால் என்ன சம்பவித்தது என்ன நடந்தது என்று யாராவது சொல்லுங்கள். அது என்ன அது சரி முதலிலேயே அக்கினி ஜுவாலை காணப்பட்டது. அது அவனுடைய கவனத்தை வசீகரித்தது, அவன் அப்பக்கமாக திரும்பினான் என்னவாயிற்று என்று உங்களுக்கு தெரியுமா. பிள்ளைகளுக்கு நான் போதிப்பதற்கு பதிலாக, இப்பொழுது பிள்ளைகள் எழும்பி நின்று எனக்கு போதிக்க போகிறார்கள். இந்த சின்ன பையன் சரியாக அந்த தகுதியானவனாக இருக்கிறான், “உன்னுடைய தகப்பன் யார். சகோ, ஜான்ஸ், உன்னுடைய தகப்பனாரா” அந்தப் பையன் போதிக்க பட்டிருக்கிறான் இல்லையா. உன்னுடைய பிரகாசமான கண்களை அவர்கள் ஒவ்வொருவரும் அதே விதமாக காணப்படுகிறார்கள். ஒருவன் இன்னொருவனை முந்திக் கொள்ள, நீங்கள் பாருங்கள். ஆகவே இப்பொழுது பாருங்கள் அக்கினி ஜுவாலை எரிகின்ற அந்த புதர் அவனை வசீகரித்தது. நான் அந்தப்பக்கமாக போய் அது என்னவென்று பார்ப்பேன் என்று அவன் சொன்னான். தேவன், “மோசேயினிடத்தில் சொன்னார். உன்னுடைய பாதரட்சைகளை கழற்றிப் போடு நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி, அங்கே போய் என்னுடைய ஜனங்களை விடுவிக்கும் படியாக, உன்னை நான் தெரிந்துகொண்டேன். 46நான் உனக்கு வல்லமையை கொடுக்கிறேன் இந்த பூமியை வாதைகளால் நீ அளிக்கலாம். நீ தண்ணீரை இரத்தமாக மாற்றலாம். நீ பேனையும் ஈக்களையும் வரவழைக்கலாம். உன்னை ஒன்றும் சேதப்படுத்த முடியாது, நான் ஏன் உன்னை தெரிந்துகொண்டேன்“ என்றால். ஏனென்றால், அவன் கிறிஸ்துவை தெரிந்துகொண்டான் புரிகின்றதா. நீ கிறிஸ்துவை தெரிந்துகொள்ள அவர் உன்னை தெரிந்து கொள்வார். பாருங்கள். இப்பொழுது அவர் சொன்னார், ”நீ என்னை தெரிந்து கொண்டாய். அங்கே எகிப்திற்கு போகும் படியாய் நான் உன்னை தெரிந்து கொண்டேன்“ என்று. அவன் என்ன செய்தான் என்று பாருங்கள். அவன் இருபது லட்சம் பேரை வழிநடத்தினான். அவனுடைய ஜனங்களாகிய இருபது லட்சம் பேரை வெளியே அழைத்துக்கொண்டு வந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் கொண்டு சென்றான். அவன் பின் தொடர்ந்து போனான். நாம் வனாந்திரத்தின் ஊடாகவும் அவனை பின்தொடர்ந்தோம், பிள்ளைகளாகிய - லியோ ஜீன் - அவர்கள் சொல்ல கேட்டீர்கள். வனாந்தரத்திலே என்னவெல்லாம் நடந்தது என்றும், எப்படி அவர் வானத்திலிருந்து அப்பத்தை கொண்டு வந்து பசியாயுள்ள ஜனங்களை போஷித்தார் என்றும், மற்ற காரியங்கள் யாவையும் உங்களுடைய அப்பாவும் அம்மாவும் உங்களுக்கு சொல்லுவார்கள். 47இப்பொழுது அவன் வயதானவனாகிவிட்டான் என்று நாம் கண்டோம். மிகவும் வயதானவன், அவனுக்கு நூற்றியிருபது வயது, அவன் வனாந்தரத்தில் இருந்தான், அப்படியிருந்தும் ஜனங்கள் அவனை முறையாய் நடத்தவில்லை, பாருங்கள். சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்து கொள்பவர்கள் கூட உங்களை நல்ல முறையாய் நடத்துவது கிடையாது. ஆனால் இயேசுவோ எப்பொழுதும் உன்னை முறையாய் நடத்துகிறார். ஆகவே இங்கே நாம் என்ன பார்க்கிறோம் என்றால், ஜனங்கள் அவனுக்கு எதிராக கலகம் பண்ணினார்கள். எப்படி இருந்தாலும் அவன் அவர்களோடு கூடவே இருந்தான். அவன் அவர்களுடைய வழி நடத்துபவனாய் இருந்தான், ஆகவே அவர்களோடு இருக்க வேண்டி இருந்தது. தேவனுடைய தூதனானவர் அவனோடு பேசினார். அந்த விதமாய் உனக்கு சம்பவிக்க வேண்டும் என்று உனக்கு விருப்பமில்லையா? அப்படியானால் சரியான தெரிந்துகொள்ளுதலை செய்து. இயேசுவை தெரிந்துகொள், அவர் அதை செய்வார். பின்னர் பாதையின் முடிவில் அவன் மிகவும் வயதானவனானான் என்று நாம் கண்டறிந்தோம். அவனால் பிரசங்கம் செய்ய முடியவில்லை அவனுடைய சத்தம் குறைந்துவிட்டது. ஆகவே அவன் யோசுவாவை ஆசீர்வதித்து மரிக்கும் படியாக ஒரு மலையின் உச்சிக்கு ஏறிபோனான். அவன் மரித்தபோது என்ன சம்பவித்தது என்று உங்களுக்கு தெரியுமா. அங்கே என்ன சம்பவித்தது, (அது சரியாக அப்படித்தான் சரியாக அப்படியே தான்) அது எங்கே நடந்தது என்று இப்பொழுது நீங்கள் சொல்லலாம், ஒரு நிமிஷம் அந்தப் பையன் சரியாய் சொன்னான் பாருங்கள். 48அவன் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டான். பாருங்கள். பாருங்கள். இப்பொழுது பாருங்கள். அவனை மரித்தோரிலிருந்து அவர் எழுப்பினார். ஏன்? ஏனென்றால் 800 வருடங்களுக்கு பின்னர் அவன் இங்கே பாலஸ்தீனாவில் அவனுடைய இன்னமும் வழிநடத்துகிறவரோடு, இயேசுவோடு நின்று கொண்டிருந்தான். அவன் எகிப்தில் உள்ள பொக்கிஷங்களிலும், அவருடைய நாமத்தினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணினான். அவன் எண்ணினான். அவருடைய வழிநடத்துபவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். உங்களுக்கு தெரியுமா? வேதத்திலே அவன் அழைக்கப்பட்டான். உங்களுக்கு தெரியுமா. இஸ்ரவேல் ஜனங்களோடு கூட ஒரு கன்மலை சென்றது. மோசே மரிப்பதற்கு ஆயத்தமானபோது அவன் அந்தக் கன்மலையின் மேல் ஏறினான். அந்த கன்மலை இயேசுவாய் இருந்தார். 49உங்களுக்கு நினைவிருக்கிறதா. இயேசுவானவர் பேசிக்கொண்டிருந்தபோது, பரிசுத்த யோவான் ஆறாம் அதிகாரத்தில். அவர்கள் சொன்னார்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவை புசித்தார்கள்” என்று. அவர், “என்னுடைய பிதா உங்களுக்கு அந்த மன்னாவை கொடுத்தார்” என்றார். ஆம் அவர்கள் மன்னாவை புசித்தார்கள் அது உண்மைதான். புசித்திருந்தும் அவர்கள் ஒவ்வொருவரும் மரித்துப் போனார்கள் ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து போய் கொண்டிருக்கவில்லை என்றார். பாருங்கள். அவர் சொன்னார், “அவர்கள் ஒவ்வொருவரும் மரித்துப் போனார்கள். ஆனால் அவர் தேவனிடத்திலிருந்து வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம் நானே” என்றார். அவர்கள், “எங்கள் பிதாக்கள் கன்மலையிலிருந்து வந்த தண்ணீரை குடித்தார்கள். மோசே கன்மலையை அடித்தான் தண்ணீர் அதில் இருந்து புறப்பட்டு வந்தது” என்றார்கள். அவர் சொன்னார், “அவனோடு இருந்த அந்தக் கன்மலை நான்தான்” என்றார். பாருங்கள். மோசே மரித்த போது அந்தக் கன்மலையின் மேல் ஏறினான், என்ன சம்பவித்தது என்று உங்களுக்கு தெரியுமா. வேதம் சொல்கிறது தேவதூதர்கள் வந்து அவனைத் தூக்கிச் சென்றார்கள் என்று. அந்த வாலிபனுக்கும் இந்த வாலிபனுக்கும் என்ன ஒரு வித்தியாசம், அந்த வாலிப மனிதன் அவன் மரித்தபோது அவன் பற்றிப் பிடிக்க தக்கதாக அவனுக்கு ஒருவரும் இல்லாமல் போயிற்று. ஆகவே அவன் பாதாளத்திற்குள் இருட்டிற்குள்ளாக அப்படியே மூழ்கினான். அவன் இப்பொழுதும் அங்கே இருக்கின்றான். ஆனால் மோசே மரித்து இந்த ஜீவியத்தை விட்டு கடந்து போனபோது, அவன் ஒரு வழிநடத்துபவரை பற்றிக்கொண்டான். 50அவருடைய தாயார் அவனை சரியாய் நடத்தினார்கள், அவருடைய தகப்பனார். அவனுக்கு நன்றாய் போதித்தார். ஆனால் அவனுக்கு வாலிபப்பிராயம் வந்த போதோ, அவன் சொன்னான், “நான் நித்திய ஜீவனை காண்கிறேன், நான் மட்டும் அந்த ஏழையான உதாசினப் படுத்தப்பட்ட இந்த ஜனங்களுக்குள் இரங்கி அவர்களோடே கூட நடப்பேனானால் எனக்கு கிடைக்கும்... ஏனென்றால் இவர்கள் தேவனுடைய ஜனங்களாய் இருக்கின்றார்கள். நான் அப்படி இருக்க வேண்டியதில்லை நான் ஒரு ராஜாவாக இருக்கலாம். ஆனால் ராஜாவாக நான் இருக்க விரும்பவில்லை. எகிப்தில் இருக்கக்கூடிய எல்லா பணத்தையும் நான் உடையவனாக இருப்பேன். ஏனென்றால் நானே அவர்களுக்கு உரிமையாளராக ஆகப்போகிறேன். அது எனக்கு தேவை இல்லை அதைக்காட்டிலும் நான் இயேசுவோடு கூட நடப்பேன்” என்றான். அதன் பின்னர் அவனுடைய ஜீவியம் முழுவதுமாய் நடந்தான். பின்னர் அவன் ஜீவியத்தை விட்டு வெளியேறினபோது, மரித்த போது, அங்கே அவனை வழிநடத்தியவர் அவன் கரம் பிடித்து அழைத்துக்கொண்டு போனார். உங்களுக்கு அந்த வழிநடத்துபவர் தேவை இல்லையா? நம் யாவருக்கும் அந்த வழி நடத்துபவரால் கரம் பிடிக்கப்பட விருப்பம் இல்லையா. நூற்றுக்கணக்கான வருஷங்களுக்கு பின்னர் அவனுடைய அந்த மகா பெரிய வழிநடத்துபவரோடு கூட காணப்பட்டான். அவர் வழிநடத்தினார், அவனுடைய வாலிபத்தின் தெரிந்து கொள்ளுதலை அவன் செய்தான். ஆகவே தேவன் அவனை பிடித்துக்கொண்டு இருந்தார். உங்களுக்கு என்னவென்று தெரியுமா? ஐசுவர்யவான் பாதாளத்தில் இருக்கிறான். வேண்டாம் என்று புறக்கணித்தானே அந்த ஐசுவரியமுள்ள வாலிபன். பாருங்கள். இப்பொழுது நினைவிருக்கட்டும் அவனுக்கு கல்வி இருந்தது, அவனுக்கு மார்க்கம் இருந்தது, அவன் சபைக்கு போனான், அவன் ஒரு நல்ல மனிதன், ஆனால் அவன் இயேசுவை வேண்டாமென்று தள்ளினான். இந்த வாலிப மனிதனோ, அவன் கற்றவனாய் இருந்தான், அவனுக்கும் ஒரு மார்க்கம் இருந்தது, ஆனால் அவனுக்கு இயேசு தேவையாயிருந்தது. பாருங்கள். இந்த வாலிபனுக்கு இருந்திருக்கக்கூடிய ஐசுவர்யத்தை காட்டிலும் மிகுதியான ஐசுவர்யத்தை மோசே உடையவனாக இருந்திருப்பான். ஏனென்றால் அவனிடம் கொஞ்சம் பணம் இருந்தது. ஒருக்கால் வயல்களும் நிலங்களும் அரசியலும் இன்னும் காரியங்களும் இருந்திருக்கலாம். ஆனால் மோசேயோ பூமியின் மேல் ராஜாவாக இருக்க வேண்டியவன். 51அவன் அவை எல்லாவற்றையும் வேண்டாம் என்று தள்ளினான். பிள்ளைகளே உங்களுக்கு என்னவென்று தெரியுமா? எகிப்தே இல்லாமல் போனாலும், பொக்கிஷங்கள் இல்லாமல் போனாலும், அங்கே இன்னமும் ஒரு மோசே இருப்பான். ஏனென்றால் அவன் சரியான காரியத்தை தெரிந்துகொண்டான். பாருங்கள். சரியான காரியம் தன்னை வழிநடத்தும்படி அவன் தெரிந்துகொண்டான். பெரிய பிரமிடுகளை இல்லாமல் போனாலும், எகிப்தில் உள்ள பிரமிடுகளைக் குறித்து நீங்கள் படித்திருக்கிறீர்களா? இல்லையா. இந்நாட்களில் ஒன்றில் அணுகுண்டின் அடியில் அது தூளாகிவிடும். உலகத்தின் ஐசுவரியம் எல்லாம், ஜனங்கள் தூக்கி ஆகாயத்தில் எறிவார்கள், அலறிக்கொண்டு அது எங்கள் சரித்திரத்திற்குள் புரையோடி விட்டது என்று சொல்வார்கள். அலறுவார்கள் கூக்குரலிடுவார்கள். பாருங்கள். அவைகள் எல்லாம் ஒழிந்து போய்விடும். ஆனால் வழிநடத்தும் படியாய் இயேசுவை ஏற்றுக்கொண்ட யாவரும் ஒரு போதும் அழியார்கள். அவர்களிடம் நித்தியஜீவன் இருக்கிறது. அவர்கள் இயற்கையாகவே இங்கே மரித்தாலும் இயேசுவானவர் அவர்களை மறுபடியுமாய் உயிரோடு எழுப்புவார். நீங்கள் ஒரு தெரிந்து கொள்ளுதலை செய்தாக வேண்டும். உன்னுடைய நித்தியமான போய் சேரும் இடத்தை உன்னுடைய தெரிந்துகொள்ளுதல் தீர்மானிக்க போகின்றது. நினைவிருக்கட்டும், நம் ஒவ்வொருவரையும் இயேசுவானவர் கேட்கின்றார், “ஜீவன் உனக்கு வேண்டுமானால் என்னை பின்பற்று” என்று. பாருங்கள். வழிநடத்தும் தன்மை என்னை பின்பற்று அப்பொழுது உனக்கு நித்திய ஜீவன் உண்டாயிருக்கும். முதியவர்களாகிய நமக்கும் கூட இதிலிருந்து நாமும் கூட ஏதோ காரியத்தை பெற்றுக் கொள்கிறோம் என்பது எனக்கு நிச்சயம். 52உங்களுக்கு ஜீவன் வேண்டுமானால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கு மார்க்கம் வேண்டுமானால் நீ அதை ஏற்றுக்கொள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால். நீங்கள் எதை ஏற்றுக் கொள்கிறீர்களோ அதை தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் எனக்கும் உங்களுக்கும் இந்த சிறு பிள்ளைகளுக்கும். நினைவிருக்கட்டும் இயேசு சொன்னார், “உங்களுக்கு ஒரு அழைப்பு இருக்கிறது” என்று. என்னை பின்பற்றி வந்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள் என்று. அதைத்தான் நாம் செய்ய விரும்புகின்றோம். இல்லையா? உங்களில் எத்தனை பேருக்கு உண்மையாகவே இயேசுவை பின்பற்றி போக விரும்புகிறீர்கள். நீங்கள் சொல்லலாம், “சரி சரி நான் பெரியவனாகும் போது பார்க்கலாம். ஒரு தெரிந்து கொள்ளுதலை செய்கின்ற அளவிற்கு வயதானபோது பார்க்கலாம்” என்று சொல்லலாம். என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எனக்கு அக்கறை இல்லை. நான் எவ்வளவு ஏழை, எத்தனை பேர் என்னை பார்த்து நகைக்கிறார்கள் அல்லது இப்படி அப்படி எல்லாம் சொல்லலாம் எனக்கு அக்கறை இல்லை. நான் இயேசுவை பின்பற்ற விரும்புகிறேன். 53நான் மோசேயிலுள்ள தெரிந்து கொள்ளுதலை செய்ய விரும்புகிறேன். ஐசுவரியவானின் தெரிந்து கொள்ளுதலை அல்ல. எத்தனை பேர்கள் அதை எங்கேயே செய்ய விரும்புகிறீர்கள்? இப்பொழுது உண்மையாகவே அதை செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் என்னோடு கூட எழுந்து நிற்க நான் விரும்புகிறேன். உங்களுடைய இடது கரத்தை உங்கள் இருதயத்தின் மீது வைத்து, உன்னுடைய வலது கரத்தை தூக்கிப்பிடித்து, உங்கள் கண்களை மூடி தலைகளைத் தாழ்த்தி, நான் சொல்லுகின்ற இந்த வார்த்தைகளை திரும்பி சொல்லும் படியாய் நான் விரும்புகிறேன். அன்புள்ள இயேசுவே, என் ஜீவனை உமக்கு பனையம் வைக்கிறேன். இந்த செய்தியை நான் கேட்டேன், இரண்டுவாலிபர்கள் அங்கே அவர்களுடைய தெரிந்துகொள்ளுதலை செய்தார்கள், அந்த வாலிப ஐசுவரியமான தலைவன் போன வழியாய் நான் போக விரும்பவில்லை. ஆனால் நான் மோசே போன வழியில் நான் போக விரும்புகிறேன். நான் வெறுமனே ஒரு சிறு பிள்ளை, அன்புள்ள இயேசுவே, நித்திய ஜீவனுக்கு என்னை வழிநடத்தும். ஆமென்... இப்பொழுது உங்கள் தலையை வணங்குங்கள், அன்புள்ள இயேசுவே இப்பூமியில் உமது புனித யாத்திரையின் போது ஒரு நாள், இந்த மதிய வேலையிலே நான் பேசிக்கொண்டு இருந்ததான பிள்ளைகள் போன்றவர்களை உம்மிடத்தில் கொண்டு வந்தார்கள். சீஷர்கள் அவரிடத்தில் எஜமான் மிகவும் களைத்துப்போய் இருக்கிறார். இன்று காலையில் அவர் பிரசங்கம் செய்துள்ளார், அவர் இதையும் அதையும் எல்லாம் பிரசங்கம் செய்தார், அவர் மிகவும் களைத்துப் போய் இருக்கிறார், அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொன்னார்கள். ஆனால் இயேசுவே நீர் சொன்னீர். சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு தடை செய்யாதீர்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது, தேவனாகிய கர்த்தாவே இந்த சிறு பையன்களையும் பெண்களையும் நீர் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளும். இந்த நீதியின் பள்ளியிலே, இங்கே நம்முடைய சகோதரர்கள் தங்களை விலக்கிக்கொண்டு வனாந்தரத்தில் பக்கமாக வந்து, உலகத்தின் காரியங்களிலிருந்து தங்களை வேறு பிரித்து கொள்ளும் வாஞ்சையுள்ள குடும்பங்களை வெளியே கொண்டுவந்து. உனக்காக மட்டும் கொஞ்ச காலம் தங்கி ஜீவிக்கும் படியாக வந்துவிட்டார்கள். இப்பொழுது அவருடைய பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய தகப்பனையும் தாயையும் அவர்களுடைய ஜீவியத்தை கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் நாங்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திலேயும் நாங்கள் மாதிரிகளாக இருக்கிறோம். ஓ அன்புள்ள தேவனே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே. எங்களுடைய அடிகளை நடத்தும் கர்த்தாவே, ஆதனால் இந்த சிறு பிள்ளைகளுக்கு முன்பாக நாங்கள் எந்த விதமான, காரியங்களை செய்து அவர்களுடைய பாதையில் நாங்கள் தடுக்கல்ளாய் இராதபடி செய்யும். 54ஏனெனில் இவ்விதமாக சொல்லப்பட்டிருக்கிறது இந்த சிறுபிள்ளைகளுக்கு இடறலை கொண்டு வருவதைக் காட்டிலும். ஏந்திரக் கல்லை தங்கள் கழுத்தில் கட்டி கடலில் அமிழ்த்து வது இலகுவாயிருக்கும் என்று, நீர் சொன்னீர். அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலேயே என் பரம பிதாவின் சமூகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று. ஆகவே அந்த மகாதூதன் பாதுகாக்கும் தூதன் இந்த ஒவ்வொரு சின்ன ஆத்துமாவையும் காக்கிறார்கள். இன்று மத்தியானத்துக்கு பிறகு இந்த சிறுவர்கள் இங்கே உட்கார்ந்துகொண்டு கண்களை விரிவாய் திறந்துகொண்டு, பார்த்துக்கொண்டும். கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டும், வேதத்தில் உள்ள குழந்தை கதைகளுக்கு செவி கொடுத்துக்கொண்டும். இப்படி அந்த இரண்டு வாலிபர்களும் தங்களுடைய தெரிந்து கொள்ளுதலை செய்தார்கள் என்றும் கேட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் அவருடைய ஜீவியத்தை உமக்கு அர்ப்பணம் செய்தார்கள். ஓ யெகோவா தேவனே அவர்களை வழி நடத்தும். அவர்களை பாதுகாரும், அவர்கள் தாமே இந்தப் பெரிய வழிநடத்துபவரை. இயேசு கிறிஸ்துவை கண்டடைவார்களாக. தகப்பனார், தாயார், உபாத்தியாயர் ஆசிரியர்கள், யாவரும் தீர்ந்து போன பிறகு அது அவர்களை வழி நடத்தும். நீர் மோசேக்கு செய்தது போன்று, அவர்களுடைய தாழ்மையான குழந்தை ஜெபங்கள் உம்மிடத்திற்கு வந்தது போன்று, அவர்களையும் நித்திய ஜீவனுக்கு வழி நடத்தும். உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில் கர்த்தாவே நான் அவர்களை உம்மிடத்தில். உம்முடைய கிரீடத்திற்கு வெற்றி சின்னங்களாக முத்துக்களாகவும் சமர்ப்பிக்கிறேன். அவர்களை இப்பூமியில் உம்முடைய கரத்திற்காக உபயோகியும் கர்த்தாவே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்... சிறுப்பிள்ளைகளாகிய நீங்கள் இப்பொழுது அதை குறித்து நன்றாய் உணருகிறீர்களா? இயேசுவானவர் உங்களுக்கு வழிகாட்டி வழி நடத்துபவர் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இல்லையா. 55சிறுப்பிள்ளைகளாகிய உங்களை இயேசுவானவர் மோசேயையும் மிரியாமையும் போல ஆக்கப் போகிறார். தீர்க்கதரிசியையும் தீர்க்கதரிசினியையும், உங்களுக்குள் இருந்து பெரிய ஆட்களை உண்டு பண்ண போகிறார். இப்பொழுது அவரை ஏற்றுக்கொண்டு இருக்கின்ற முதியவர்களாகிய நாம், நம்மையும் கூட அவர் வழிநடத்த வேண்டும் என்று நமக்கு விருப்பம் இல்லையா? அவர் என் கரத்தை பற்றி, என் பாதைக்கு வழிகாட்டி, என்னை தொடர்ந்து வழி நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நானும் கூட ஆற்றண்டை வரும் போது அவரின் கரத்தில் ஒரு பிடிப்பு எனக்கு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நம் எல்லாருக்கும் அது தேவை இல்லையா. அன்புள்ள இயேசுவே எங்களையும் கூட வழி நடத்தும், இப்பொழுது நாங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய போகின்றோம். நான் டூசானுக்கு திரும்பிப் போக வேண்டும். வருகின்றதான கூட்டங்களுக்காக நான் ஆயத்தமாக வேண்டும். தேவனே இந்தக் கூட்ட ஜனத்தை, சகோதரன், லியோ. சகோதரன், ஜீன். பின்பற்றுகிறவர்களாகிய இங்குள்ள யாவரையும் உம்முடைய கரத்தில் ஒப்படைக்கிறோம். அவர்களுடைய அக்கிரமங்கள் எல்லாம் மன்னித்துக் கொண்டு, அவர்களுடைய வியாதிகளை எல்லாம் சுகப் படுத்திக்கொண்டு, அவர்களை என்றென்றைக்குமாய் அன்பிலும் அன்னியோனியத்திலும் வைத்துக்கொண்டு, சோர்ந்து போனவர்களை உற்சாகப்படுத்தும்படி உம்முடைய கரத்தில் இவர்களை ஒப்புவிக்கிறேன். சில நேரங்களில் சாத்தான் தொடர்ந்து வந்து அவர்களை சோர்ந்து போக பண்ணும் படியாய் செய்யலாம். ஆனால் நினைவிருக்கின்றது நீர் அதே காரியத்துக்குள்ளாக, அதை எங்கள் இந்த பூமியின் மனிதனால் ஜனங்களால் கைவிடப் படுதலுக்குள்ளாக சென்றீர். சில நேரங்களில் மிகவும் நெருக்கமான நண்பர்கள், சொந்த பந்தமானவர்களும் கூட கைவிட்டனர். ஆனால் நாங்கள் தெரிந்து கொண்ட ஒருவர் இருக்கிறார். அவர் ஒருபோதும் எங்களை விட்டு விலகவும் மாட்டார் அல்லது கைவிடவும் மாட்டார். நித்திய ஜீவனுக்கு எங்களை வழி நடத்தும் கர்த்தாவே, நான் அநேக அநேகம் முறைமைகளிள் பூமியின் மேல் கூடிவந்து, உம்மிடம் பேசவும் உம்மைப் பற்றி பேசும் படியாகவும் எங்களுக்கு இதை நீர் அனுக்கிரகம் செய்யும் படியாய் நான் ஜெபிக்கிறேன். 56அப்படியானால் உலகம் முடிந்து போய் காலமெல்லாம் நித்தியத்திற்குள் மறைந்து போகும் அந்த மகத்தான நாளிலே. நாங்கள் பிரிக்கப்படாத குடும்பங்களாக இனிமேல் என்றென்றைக்குமாய் சேர்ந்து வாழும் படியாக. அந்த மகா பெரிதான ராஜ்யத்தில் நாங்கள் சந்திப்போமாக. இவைகளை அருளும் கர்த்தாவே. அதுமட்டுமாக சூரியன் இன்னமும் பிரகாசித்து கொண்டிருக்கையில், நாங்கள் வேலை செய்வோமாக. முழு பெலத்தோடும் உழைப்போமாக, இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்...